இந்தியாவின் முதல் சமூகநீதி ஆணை வெளியிடப்பட்ட நாள்: ஜூலை 26

1902ஆம் ஆண்டு ஜூலை 26 இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் சமூகநீதி காவியத்தில் புதிய பொன்னேட்டைப் பொறித்த நாள். ஆம். இந்நாளில்தான் இன்றைக்கு 115 ஆண்டுகளுக்கு முன் சாகு மகராஜ் முதன்முதலாக இடஒதுக்கீடு தொடர்பான ஓர் ஆணையைப் பிறப்பித்த நாள்! 50 சதவிகித இடங்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் வகையில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். தாழ்த்தப்பட்டவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கிப் படிக்க விடுதி ஒன்றையும் ஏற்படுத்தினார். அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுடன் தாழ்த்தப்பட்டவர்களையும் சமமாகக் கவனிக்கவும், […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கே:    ‘நீட் தேர்வு’ முடிவுகளில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பிடிக்கவில்லை என்பது எதனைக் காட்டுகிறது?     – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப:    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து, தமிழகத்திலிருந்து ‘நீட்’ எழுதியவர்களில் எவரும் வராதது _ தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தால்தான் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற முடியவில்லை என்பது பொருந்தாத வாதம் என்பதையே காட்டுகிறது! கே:    பிழைப்புத் தேடி வந்தவனையெல்லாம் வாழவிடலாம்! ஆனால், தமிழ்நாட்டை ஆளவிடலாமா?     – ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி ப:    தமிழ்நாட்டு வாக்காளர்களின் […]

மேலும்....

நாவலர் பாரதியார் பிறந்த நாள் ஜூலை 27

நாவலர் சோமசுந்தர பாரதியார் பன்மொழிப் புலவர் _ 1938இல் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் வளர்ந்தெழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தளபதிகளாகத் திகழ்ந்தவர்களுள் இப்புலவரும் முக்கியமானவர். “இந்தி வேண்டாம் வேண்டாம் என்று நான் அறைகூவிச் சொல்கிறேன். வேண்டாம் என்பதற்கு ஆயிரம் காரணமுண்டு. வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாவது உண்டா? எந்த அமைச்சருடனும் நான் வாதாடத் தயார்! யாரேனும் வருவார்களா?’’ என்று சூளுரைத்த தீரர் அவர். கட்டாய இந்தி வேண்டும் என்பதற்கு அமைச்சர்கள் கூறிய போலிக் காரணங்கள் எல்லாவற்றையும் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

                                                                   டாக்டர் டி.எம்.நாயர்                                                                    (மறைவு: 17.07.1919) டாக்டர் டி.எம்.நாயர் (தரவாட் மாதவன் நாயர்) அவர்கள் இங்கிலாந்தில் காது, மூக்கு, தொண்டை (E.N.T.) துறையில் மிகப் பெரிய மருத்துவப் படிப்பு முடித்துத் திரும்பிய அறிஞர். டாக்டர் சி.நடேசனார் திராவிடர் சங்கத்தை 1912 முதலே உருவாக்கி நடத்திய நிலையில்,  டி.எம்.நாயர், சர்.பிட்டி.தியாகராயர் இருவரும் அதில் இணைய இம்மூவரும் முப்பெரும் தலைவர்களாகி முன்னெடுத்துச் சென்றனர் _ திராவிடர் இயக்கத்தை! “நீதிக்கட்சி’’ என்று மக்களால் அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (S.I.L.F.) […]

மேலும்....