உங்களுக்குத் தெரியுமா?

பகுத்தறிவுச் செம்மல் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். அதன் காரணமாக முன்பு ‘நாராயணசாமி’யாக இருந்தவர் பின் ‘நெடுஞ்செழியன்’ ஆனார். (பெயர் மாற்றம் செய்து கொண்டார்.) மேடைப் பேச்சில் வல்லவரானார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் மதிப்புடையவரான அவர் எம்.ஏ., பட்டப் படிப்பை முடித்து சிலகாலம் தந்தை பெரியாருடன் சுற்றுப் பயணம் செய்து தொண்டாற்றியவர். நாவலரின் அரசியல் வாழ்வு 1949இல் தி–.மு.க. பிறந்தபோதே […]

மேலும்....

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் 07.07.1859

அன்றைய செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகத்தை அடுத்த கோழியானூர் கிராமத்தில் இரட்டை மலை என்னும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் இரட்டை மலை சீனிவாசன் (1860 ஜூலை 7). தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பெம்மான் இவர்.1893இல் பறையன் என்ற பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். மூன்று மாதம் மாத இதழாகவும், அதன்பின் வார இதழாகவும் 7 ஆண்டு காலம் தொடர்ந்து அவரால் நடத்தப்பட்டது. தன் சமுதாயம் வெளிப்படையாக அடையாளம் காட்டப்பட்டு இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும் […]

மேலும்....

பக்கவாத நிவர்த்திக்கு உதவும் ரோபோ கருவி

தென்கொரியாவில் உள்ள உல்சன் தேசிய அறிவியல் நிறுவனம் (Ulson National Institute of Science)  பக்கவாத நோயை நிவர்த்தி செய்வதில் உதவக்கூடிய ஒரு ரோபோ கருவியைக் கண்டுபிடித்துள்ளது. பக்கவாதம் தாக்கிய பின்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தி. இந்தச் சாதனம் நோயால் தாக்கப்பட்ட முன் கையிலும், மணிக்கட்டிலும் உள்ள செயலற்ற தன்மையை 3 நிலைகளில் அளவிட்டு ஒரு சில நிமிடங்களிலேயே நிவாரணமளிக்கிறது. இந்த விஞ்ஞானிகள் குழுவினர் முன்கை மற்றும் மணிக்கட்டுகளின் செயலற்ற, சோர்வடைந்த, விரைத்துப்போன நிலைமைகளை […]

மேலும்....

வயது ஏற ஏற இலட்சியத்தை அடைய கூடுதல் துடிப்புடன் செயல்பட்டவர் பெரியார்!

26.01.1981 அன்று குடும்ப நலத்துறை _ பெரியார் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய “குடும்ப நல பயிற்சி முகாம்!’’ பெரியார் நூலக ஆய்வகத்தில் என் தலைமையில் துவங்கியது. எங்களைப் பொருத்தவரையில் குடும்ப நலத் திட்டப் பிரசாரத்தை அன்றாடக் கடமையாகக் கருதி, திராவிடர் கழகக் கூட்டங்களிலும், பகுத்தறிவாளர் கூட்டங்களிலும் சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சிகளிலும் அன்றாடம் வலியுறுத்தி கடந்த 50 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். “80 ஆண்டுக் கால அனுபவம் எனக்கு இருக்கிறது’’ என்று தந்தை பெரியார் அவர்கள் […]

மேலும்....

செய்யக் கூடாதவை

சர்க்கரை நோயாளி பூண்டு சாப்பிடத் தவறக்கூடாது தொடர்ந்து பூண்டு சாப்பிட்டால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும். பூண்டிலுள்ள அமினோ அமிலம் இப்பணியைச் சிறப்பாகச் செய்கிறது. வெந்தயம் ஊற வைத்துத் தினம் சாப்பிட வேண்டும். ஆவாரம்பூ துவையல், பாகற்காய், வேப்பிலை, சிறுகுறிஞ்சான், நாவற்பழ விதை போன்றவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.ஆங்கில மருந்தின் அளவைக் குறைப்பதோடு சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து காக்கும். 50 வயதுக்கு மேல் பகலில் 15 நிமிடம் தூங்கக் தவறக் கூடாது பகலில் தூங்குவது உடல் பருமனை […]

மேலும்....