முற்றம்

The Factory –Documentary film The Factory என்ற ஆவணப் படத்தை 18ஆம் தேதி பெரியார் திடலில் நடந்த திரையிடலில் பார்த்தேன். 2011ஆம் ஆண்டு ஹரியானாவின் மனேசர் என்ற ஊரில் இருக்கும் மாருதி சுசூகி தானியங்கி வாகன தொழிற்-சாலையில் தொழிலாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு மேலாளர் இறந்துவிட அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 147 பேரை சிறையில் அடைத்தது அந்த நிறுவனம். தொழிலாளர்கள் தங்கள் உரிமையை மீட்டெடுக்க தங்களுக்கென்று ஒரு தொழிற்சங்கம் அமைக்க நிறுவனத்-திடம் அனுமதி கேட்க […]

மேலும்....

கடவுளுக்குக் கல்தா!

உயிரற்ற குச்சியப் பொருளிலிருந்தே உயிர்களை உருவாக்க முடியும் என்று டாக்டர் வென்ட்டர், டாக்டர் கிளயர் ஃப்ராசர் கண்டுபிடித்த செய்தி ஏற்கனவே வெளியில் வந்து பிற்போக்குவாதிகளை வெலவெலக்கச் செய்தது. புதிய மனித குலத்தைப் பூக்க வைக்கப் போகும் இந்தச் “சுடச்சுடச்” செய்தி பல முகாம்களை அதிர வைக்கும் என்பதில் அய்யமில்லை. கடவுள்தான் மனிதனைப் படைத்தார்; அதுவும் தன் விலா எலும்பிலிருந்து படைத்தார்; முகத்திலிருந்தும், தோளிலிருந்தும், இடுப்பிலிருந்தும், பாதங்களிலிருந்தும் படைத்தார் என்று கதைவிட்டு மாபெரும் மனித குலத்தைச் சுரண்டிக் கொழுத்த […]

மேலும்....

அன்றாட வாழ்வில் மூடநம்பிக்கைகள்

கெ.நா.சாமி   பொழுது விடிந்து எழுவது முதல், அன்றாடம் இன்றைய சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்ற மூடச்செயல்பாடுகள் அணிவகுத்து நிற்கின்றன. காலையில் எழுந்திருக்கும்போதே இராசியான முகத்தில் விழிக்க வேண்டும். அப்போதுதான் இன்றையபொழுது இனிதாகக் கழியும், வெற்றிகள் கிட்டும் என்று ஒரு நம்பிக்கை. இதற்கு ஏதாவது அறிவுப்பூர்வமான விளக்கம் தரமுடியுமா? அவர் முகத்தில் விழிக்கும் எல்லா நாள்களிலும் நல்லதே நடக்குமா? பல நாள்களில் கெட்டதும் நடக்குமே. அதேபோல் இராசியற்ற முகத்தில் விழிக்கும் பல நாள்களில் நல்லதும் நடக்குமே. எனவே, நடக்கும் […]

மேலும்....

விடுதலையில்லா மண்ணில் மக்கள் வலி!

 பழநிபாரதி கர்ப்ப வலி… பிரசவ வலி… முகம்பார்க்கும் முன்பேகுழந்தை இறந்துவிடும் இழப்பின் வலி… அதற்காகசுரந்து சுரந்து பால்கட்டி நிற்கிற மார்பின் வலி…மறுபடியும் ஓர் ஈன்றெடுப்புக்கு உடலையும் மனத்தையும்பக்குவப்படுத்தும் தாய்மையின் வலி..குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணுக்குரியஇந்த வலிகள் அனைத்தும் விடுதலையைப்பெற்றெடுக்கும் மண்ணுக்கும் உரியன.விடுதலை இல்லாத மண்ணில், பிறப்பதையும்இறப்பதையும்விடக் கொடுமையானதுவாழ்தலின் வலி.தண்ணீரிலிருந்து தரைக்குத் தள்ளப்பட்ட மீனின்உயிர்த்துடிப்பு…தரையிலிருந்து தண்ணீருக்குள் விழுந்துவிட்டஎறும்பின் பரிதவிப்பு…தாய்மண்ணைவிட்டு விரட்டப்படுகிற பூர்வகுடிகளின்மனக்கொதிப்பு…

மேலும்....

தமிழ்ப் புத்தாண்டு

.தைப்பொங்கல் திருநாள் தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டுத் தொடக்க நாளாகும். வடநாட்டாருக்குத் தீபாவளி வருடப்பிறப்புப் போல, தமிழ் நாட்டாருக்குப் பொங்கல், புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புது வருட மாதமாகிவிட்டது. சூரியன் தட்சிணாயனத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்தராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவ மாறுதலை வைத்தே ஆண்டுத் தொடக்கத்தை வரையறுத்தார்கள். இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது தைப் பொங்கல் விழா தமிழர் மட்டுமல்லர். […]

மேலும்....