பார்வதி குளம்

“மீட்போம், மீட்போம்! பார்வதி குளத்தை மீட்போம்!’’ “வெளியேறு! வெளியேறு! பார்வதி தீர்த்தம் குடித்த குளத்தை விட்டு வெளியேறு’’ “சிவன் சொத்து குலம் நாசம்’’ தனது வீட்டிற்கு முன்னால் கேட்ட பெரும் இரைச்சலை செவிமெடுத்த அழகுமுத்து வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். வீட்டிற்கு முன் ஆண்களும், பெண்களுமாக சுமார் அய்ம்பது பேர் நின்றுகொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அனைவர் நெற்றியிலும் விபூதி, குங்குமம் நிறைந்திருந்தது. அதே தெருவில் வசிக்கும் பக்தர்கள். “என்ன சமாச்சாரம்? ஏன் இப்படி சத்தம் போடறீங்க?’’ […]

மேலும்....

ஆதித்தனார் இறப்பிற்கு இருவரி எழுதிய ஆங்கில ஏடுகள்

29.04.1981 அன்று சென்னை சட்டக்கல்லூரியின் தமிழ்ப் பேரவையின் சார்பில் “சமூகநீதி இடஒதுக்கீடு’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகக்  கலந்துகொண்டேன். அரங்கம் முழுவதும் இருபால் மாணவர்கள் நிரம்பியிருந்தனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இலக்கியப் பேரவைத் தலைவர் தேவராசன் தலைமை வகித்தார். பேரவைச் செயலாளர் திரு.மணிவாசகம் அவர்கள், இடஒதுக்கீடு பிரச்சனையையொட்டி ஒரு வழக்காடு மன்றம் நடத்த தாம் வலியுறுத்தியதாகவும், அதை மற்றவர்கள் ஏற்காததால் இப்படி ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார். […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா?

விநாயகருக்கு யானைத் தலை வைத்தது உறுப்பு மாற்று அறிவியலா? இன்றைய அறிவியல் உலகில் மனிதனின் எந்த உறுப்பு பழுதானாலும், அதை மாற்றி வேறு ஒருவரின் கொடையாகப் பெற்ற அவ்வுறுப்பைக் பொருத்தும் மிகச் சிறந்த மருத்துவ அறிவியல் வளர்ச்சியை நாம் படிப்படியாக முயன்று பெற்றுள்ளோம். ஆனால், இந்துத்வா பேர்வழிகள் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு எங்கள் இந்து மதமே அடிப்படை (முன்னோடி) என்று சொல்லி விநாயகர் புராணத்தைக் காட்டுகிறார்கள். அக்கதை இதோ: “ஒரு நாள் சிவனின் பெண் […]

மேலும்....

அறிவுப்பெருஞ்சுடர்!

பெரியார் என்பவர்விடுதலை வெளிச்சத்தின்விளம்பரப் பலகை!மூட முதுகுகளைமுன்னெழ நிமிர்த்தியமுற்போக்கு வார்த்தை! பெரியாரின் கருஞ்சட்டைபச்சைத் தமிழர்கள்சிவப்புச் சிந்தனை! பெரியாரின் வெண்தாடிபகுத்தறிவு தேசத்தின்வரைபடம் வாள் கொண்ட சமூகம்நூலால் சரிந்தபோதுஅவருடைய கைத்தடியேதாங்கிப்பிடிக்கும் தாயாயிருந்தது! பெரியாரின் கையிலிருந்ததுகைத்தடி அல்லகாலச்சக்கரத்தின்கருத்து அச்சாணி! பெரியாரின் கேள்விகள்பாமர மக்களின்பதிலுக்காகக் கேட்கப்பட்டவை! பெரியார் ஒருவர்தான்சோகங்களிலிருந்துசொந்தங்களை விடுவித்தவர்! புராணக் குப்பைகளைபொசுக்கிப் போட்டஅறிவுப் பெருஞ்சுடர்!                                                                                                                   […]

மேலும்....

2019 – தேர்தலை இனப் போராட்டமான தேர்தலாய் நடத்துவோம்!

கே:    “மாதொருபாகன்’’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதற்கு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது எழுத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலல்லவா?     – இலட்சுமிபதி, தாம்பரம் ப:    நிச்சயமாக. சாகித்ய அகாதமியின் தேர்வு மூலம் தமிழ்நாட்டிற்கே தனிப்பெருமை தரும் தமிழ் எழுத்தாளர்.     சில ஜாதி வெறியர்களின் தலையீட்டிற்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் வைத்த குட்டு மறந்து விட்டதா?     சலசலப்புக்கு சாகித்ய அகாதமி அஞ்சக்கூடாது. பெருமாள் முருகனின் பெருமை _ தமிழனின் பெருமையாகும். […]

மேலும்....