என்றூம் இளமை காக்கும் “இ”- வைட்டமின்!

வைட்டமின்_ஏ மற்றும் ‘டி’யைப் போல இந்த ‘இ’ வைட்டமினும் கொழுப்பில் கரையும் தன்மை உடையது. கொழுப்பில் கரைந்த பின்னர் பித்தநீரும் சேரும்போதுதான் இது சிறுகுடலில் நன்கு உறிஞ்சப்படும். சிகப்பு அணுக்களின் உற்பத்திக்கு இந்த வைட்டமின் மிகவும் தேவை. அகச் சுரப்புகளில் முக்கியமாக பிட்யூட்டரி, அட்ரினல், இனப்பெருக்க ஹார்மோன்கள் நன்கு வேலை செய்ய, நன்றாக சரியானபடி சுரப்பதற்கு இந்த வைட்டமினும் சரிவர பெறப்பட வேண்டும். நமது உடல் இந்த வைட்டமினையும் ஒரு சில நாட்கள் கொழுப்பில் சேமித்து வைக்க […]

மேலும்....

நான் கண்ட புரட்சிக்கவிஞர்

தந்தை பெரியார் தமிழ் படித்த புலவர்கள் அனைவரும் சாமியார்கள் ஆவதுதான் பாரம்பரியமான வழக்கம். அதை உடைத்து நொறுக்கி புரட்சி செய்த முதல் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்கிறார் தந்தை பெரியார். தந்தை பெரியார் கண்ட புரட்சிக்கவிஞரை நீங்களும் காணுங்கள் இனி. நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது. கடவுளைப் பற்றி பாடுவதும், புராணங்கள், ஸ்தல புராணங்கள் பாடுவதும், புலமைக்கு அழகு என்று எண்ணி வந்தார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், பட்டினத்தார், தாயுமானவர், […]

மேலும்....

முற்றம்

“ஜோக்கர்’’ திரைப்படத்திற்கு தேசிய விருது! ஜோக்கர் திரைப்படம் வெளியானபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உட்பட முக்கியமானவர்-களை அழைத்து தனித்திரையரங்கில், அப்பட இயக்குநர் “இராஜூமுருகன்’’ அவர்கள் திரையிட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த பின் ஆசிரியர் அவர்கள் “இப்படம் மிகச் சிறப்பாக, சமூக அக்கறையுடன் ஒப்பனைகள் இன்றி உள்ளது உள்ளவாறு காட்சிப்-படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறி இயக்குநருக்குத் தமது தனிப்பட்ட பாராட்டையும் தெரிவித்தார். உண்மை இதழும் தனது திரைப்பார்வையில் இப்படத்தைச் சிறப்பாகச் பாராட்டி விருதுக்குத் தகுதி உடைய படம் […]

மேலும்....

தமிழீழத் தந்தை செல்வா

மலேசிய நாட்டில் ஈப்போ பகுதியில் பிறந்த, சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வ-நாயகம் என்ற பெயருடையவரே பின்னாளில் செல்வா என்று எல்லோராலும் அறியப்-பட்டவர் ஆவார். இவரது தாய்நாடு இலங்கைதான். ஆனால் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மலேசியாவில் உள்ள ஈப்போ மாநிலத்தில்தான். இவரது தந்தை வேலுப்பிள்ளை மலேசியாவில் வணிகத்துறையில் இருந்தார். ஆனால், செல்வா இளம் வயதாக இருக்கும்-போது, இவரது தந்தை இறந்து போனார். அதன் காரணமாக இவர் மீண்டும் இலங்கைத் திரும்ப வேண்டியதாயிற்று. மலேசிய மொழியில் ஈப்போ என்பதற்கு தூய்மை […]

மேலும்....

எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து கொல்கத்தாவில் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பீனிக்ஸ் இந்தியா ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜோதி பிரகாஷ் தாஸ் தெரிவித்ததாவது: நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் மட்டு-மல்லாது, தெற்கு ஆசியாவிலேயே முதன்முறையாக இத்தகைய பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தை இயக்குவது தொடர்பாக, மாநில அரசிடம் ஒப்புதல் கோர உள்ளோம். இந்த மாதத்துக்குள் சாண எரிவாயு மூலம் இயங்கும். மேலும் […]

மேலும்....