செய்யக் கூடாதவை

மருந்து, விஷம், கூர்மையான பொருள்கள், அடுப்பு, மின் இணைப்பு குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் இருக்கக் கூடாது குழந்தைகளுக்கு இவற்றின் பாதிப்பு என்னவென்று தெரியாது. அவர்கள் நல்லதையும், கெட்டதையும், ஆபத்தானதையும் ஒரே மாதிரிதான் பயன்படுத்துவர். எனவே, பெரியவர்கள்தான் அவற்றை அவர்கள் கைக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். குழந்தைகள் அறியாதவர்கள் என்பது மட்டுமல்ல மென்மையானவர்கள். எனவே, இவை உடனே பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்கள் உயிருக்கே பாதிப்பை உண்டாக்கும். எனவே, குழந்தைகளுக்குப் பாதிப்பு வராத வகையில் எதையும் வைக்க […]

மேலும்....

+2 மாணவர்கள் உதவித் தொகையுடன் ‘ஆனர்ஸ்’ படிக்க வாய்ப்பு

  கணிதப் பாடத்தைக் கற்றுத்தருவதில் நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்று சிஎம்அய் என்று அழைக்கப்படும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்மேட்டிக்ஸ். இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை சிறுசேரியில் இயங்கி வருகிறது. கணிதத்துறையில் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இது. இந்த அமைப்புக்கு மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் உதவி வருகின்றன. சென்னையில் மேட் சயின்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பாடங்கள் நடத்தப்படுகின்றன. மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், […]

மேலும்....

சிங்கள இராணுவத்தை விரட்டிய தமிழ்ப் பெண்கள்!

2009 இல் முடிந்த ஈழ இனப்படுகொலைப் போரின் பின்னர், ஒட்டுமொத்த ஈழமும் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. ஈழத் தமிழ்மக்களின் வீடு, பள்ளிக்கூடம், கோயில், தெருக்கள், காடு, கடல் என்று எங்கும் இராணுவம்தான். 2009ஆம் ஆண்டிலிருந்து சிங்களப் படைகளிடம் வீழ்ந்த ஈழ நிலத்தை மீட்பதற்காக கிராமம் கிராமமாக ஈழ மக்கள் போராடி வருகிறார்கள். அவற்றுள் ஒரு கிராமம் கேப்பாபுலவு கேப்பாபுலவு, ஈழ இனப்படுகொலை நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின், நந்திக் கடலோரமாக அமைந்திருக்கும் கிராமம். வளமான நிலம். கடல் […]

மேலும்....

மந்திரம் என்பது மாபெரும் மோசடி!

  மந்திரம் என்றால் என்ன? குறிப்பிட்ட சில சொற்களைச் சொன்னால் அதற்குச் சக்தியுண்டு. அது குறிப்பிட்ட சிலவற்றைச் சாதிக்கும் என்பதே மந்திரம் என்று சொல்லப்படுகிறது; நம்பப்படுகிறது. வார்த்தைகளுக்குச் சக்தியுண்டா? மொழியென்பதே மிகப் பிற்காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் சொற்களும் இல்லை; மொழியும் இல்லை. தான் நினைக்கும் கருத்தைப் பிறருக்குச் சொல்லும் கருவியே வார்த்தைகள் _ அவற்றின் தொகுப்பே மொழி. அப்படியிருக்க அதற்கு எப்படி சக்தி வரும்; அது எப்படி ஒன்றைச் சாதிக்கும்? நஞ்சு போக்கும் மந்திரம்? […]

மேலும்....

மருத்துவக் காப்பீடு கட்டாயத் தேவை!

நம்முள் பலரும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் தரமான உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெற எல்லாரிடமும் போதியப் பண வசதி இருக்காது. எனவே ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது மிக அவசியம்தான். மாத ஊதியம் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் பிறரும் அதிக சிரமமின்றி மருத்துவக் காப்பீடு பெறலாம். எல்லோர்க்கும் எளிது: தயக்கம் வேண்டாம்: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுதோறும் பிரீமியம் தொகை செலுத்த வேண்டுமே! எல்ஐசி பாலிசி போன்று முதிர்வு நிலையில் […]

மேலும்....