கணபதி உருவ பொம்மை உடைப்பு!

திராவிடத் தோழர்களே! இந்தியாவில் “வெள்ளைக்கார சக்கரவர்த்தி’’ ஆட்சி ஒழிந்து பார்ப்பன ஆதிக்க “ஜனநாயக ஆட்சி’’ ஏற்பட்டதிலிருந்து, இன்று, இந்த நேரம் வரை ஒவ்வொரு மாத்திரை நேரமும் வருணாச்சிரம தரும ஆட்சி வளர்ந்து வளம் பெற்று வருகிறது. வருணாச்சிரம தருமத்தைப் புகுத்தப் பார்ப்பன ஆதிக்க ஏகபோக ‘ஜனநாயக’ ஆட்சியானது ஆட்சி முறை  பல துறைகளில் பல கொடுமையான முறைகளைக் கையாண்டு வந்தாலும்  திராவிட நாட்டில் _ தமிழ் நாட்டில் _ தென் இந்தியாவில் _ சென்னை ராஜ்ஜியத்தில் “வெள்ளைச் […]

மேலும்....

ஆபிரகாம் பண்டிதர்

பிரபல தமிழிசைக் கலைஞரும் சித்த மருத்துவருமான ஆபிரகாம் பண்டிதர் திருநெல்வேலி மாவட்டத்தில் சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில் பிறந்தார்(1859). ஆசிரியர் பயிற்சி முடித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் மருத்துவத்தில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்ததால், தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பெரிய மூலிகைப் பண்ணையை உருவாக்கினார். உள்ளூர் மக்களிடையே அது பண்டிதர் தோட்டம் எனப் பிரபலமடைந்தது. மூலிகைகளைப் பயன்படுத்தி பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். இவர் தயாரித்த கோரசனை மாத்திரை […]

மேலும்....

பிள்ளையார் சதுர்த்தியா? மதவெறி கலகத் தூண்டலா?

கடவுளுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை என்று கூறும் ஆத்திகர்கள் _ நம்பிக்கை யாளர்களின் நகைமுரண்பாடு எது தெரியுமா? பிறக்காத கடவுளுக்கு (சரியாகச் சொல்ல வேண்டுமானால் இல்லாத கடவுளுக்கு) பிறப்புக் கொண்டாடியும் இறப்புக்கான புராணக்கதை கூறுதலும் ஆகும்! விநாயகருக்கு _ “சதுர்த்தி’’ (பிறந்த நாள்) கிருஷ்ணருக்கு _ “அஷ்டமி’’ ராமனுக்கு _ “நவமி’’ கந்தனுக்கு _ “சஷ்டி’’ பிள்ளையார் சதுர்த்தியாம்! _ செப். 25இல் முன்பு ஆண்டுதோறும் ஒருநாள். அதுவும் வெறும் மூடநம்பிக்கை மட்டும்தான்; களிமண் பிள்ளையாரை, செய்யும் […]

மேலும்....

இடஒதுக்கீட்டால் மருத்துவரான இருளர் இனத்துப் பெண்!

இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவராகிச் சாதித்துள்ளார். அவர் பெயர் துளசி. மேல்நிலை கல்விக்காக பல சவால்களை சந்தித்த துளசி, முயன்று மருத்துவராய் வெற்றிபெற்று இருளர் சமூகத்தின் இருளை நீக்கி இருக்கிறார். அடிப்படை மருத்துவ வசதிகூட கிடைக்காமல் அவதிப்படும் தன் இன மக்களுக்கு பணி செய்வதே தன் விருப்பம் என்கிறார் இந்த ஒளிவிளக்கு. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு மிக அருகில், கோவை மாவட்டத்தின் தமிழக எல்லைப்பகுதியான ஆனைக்கட்டியை ஒட்டி அமைந்திருக்கும் அட்டப்பாடி பகுதிதான் துளசியின் பிறப்பிடம். […]

மேலும்....

கொண்டாட வேண்டுமா கோகுலாஷ்டமி!

இம்மாதம் 14ஆம் நாள் ‘கோகுலாஷ்டமி’ என்று நாள்காட்டிகள் கூறுகின்றன. கோகுலாஷ்டமி என்றால் என்ன? அதுதான் கோபியர்களையெல்லாம் கூடிக்கூடிக் கூத்தடித்த கிருஷ்ணனின் பிறந்த நாளாம்! இந்த நாளைக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன? அவன் என்ன மனித சமூகத்துக்கு ஆற்றொனா அரிய பணிகளை ஆற்றியவனா? அறிவுக் கூர்மையை போதித்தவனா? என்றால் இல்லை, இல்லை. அவன் கதைகள் அத்தனையும் பிறப்பு முதல் வளர்ப்பு வரை ஆபாசக் களஞ்சியமே! பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்களே அவன் எப்படிப் பிறந்தான் என்பது குறித்து புராணங்கள் கூறும் […]

மேலும்....