உங்களுக்குத் தெரியுமா?

                                                    திரு.வி.க.   தோற்றம் : ஆகஸ்டு 26 – 1883 தந்தை பெரியாரின் நண்பராய், தமிழறிஞராய், தொழிற்சங்க மேதையாய் பல்வேறு பரிணாமங்களில் இந்த நாட்டிற்கு  தமது பங்களிப்பைத் செலுத்தியவர் திரு.வி.க. தற்போது சென்னை நகராக விரிவு கண்டிருக்கும் போரூரை அடுத்த துள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தவர். அவரது தந்தையார் விருத்தாசலம், தாயார் சின்னம்மாள், தந்தையின் பூர்வீகமான திருவாரூரையும் அவரது பெயரான விருத்தாசலத்தையும் தன்னோடு சேர்த்துக் கொண்டதால் கலியாணசுந்தரனார் திரு.வி.க. ஆனார். வெஸ்ஸி கல்லூரியில் படிக்கும்போதே அவரது […]

மேலும்....

நூல் அறிமுகம்

நூல்: மறுப்புக்கு மறுப்புஆசிரியர்: மறைமலையடிகள் வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 7.  பக்கங்கள்: 80 நன்கொடை: ரூ.50/- தமிழ்க்கடல் மறைமலையடிகள் எழுதிய அறிவுரைக் கொத்து என்ற புத்தகம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தின் ஒரு கட்டுரையான ‘தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்’ என்னும் கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பார்ப்பனர்கள் கொந்தளித்தார்கள்; பார்ப்பன ஏடுகள் சீறின. தந்தை பெரியாரும் சுயமரியாதை இயக்க […]

மேலும்....

குறும்படம்

Blacksheep தயாரிப்பில் ‘A Period Film’’ என்ற தலைப்பில் நிஷிஜி வரியைக் கண்டித்து, ஒரு குறும்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மூவர்ணக் கொடியைத் தாங்கி வரும் ஒரு பெண் (பாரத மாதா) வழியில் மாத விலக்குக்கான வலி ஏற்பட்டு, எதிரில் தெரியும் மருந்தகத்தில் சானிட்டரி நாப்கின் கேட்கிறார். கடைக்காரர், “இது புதிய இந்தியா; ஆகவே, கூடுதலாக வரி செலுத்த வேண்டும்’’ என்று கேட்கிறார். அதேசமயம் ஆணுறை கேட்டு வரும் ஒருவருக்கு, கொடுத்த காசில் ஒரு பகுதியை திருப்பிக்கொடுத்து Tax […]

மேலும்....

கடவுச் சொல்லைப் பாதுகாப்பது எப்படி?

அதிக கடினமான மற்றும் நீண்ட கடவுச்சொல்லாக இருந்தால் ஹேக்கர்களால் மட்டுமில்லை வேறு யாராலும் யூகிக்க முடியாது. கடவுச்சொல் தேர்வு செய்யும்போது உங்களது குழந்தைகள் பெயர், பிறந்த நாள் போன்ற தனிப்பட்ட தகவல்களைச் சேர்க்கக் கூடாது. நீண்ட கடவுச்சொல்லில் அதிக எழுத்துகள், இடையில் எண் போன்றவைகளைப் பயன்படுத்தினால் உங்களது கடவுச்சொல் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கும். பல்வேறு தளங்களிலும் ஒரே கடவுச்சொல் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத சேவைகளின் கணக்குகளை அழித்தல் அல்லது […]

மேலும்....

ராபர்ட் கால்டுவெல்

இன்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்டவர். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் ஒப்பற்ற நூலை ஆங்கிலத்தில் எழுதி, தமிழ் மொழிக்கு உலக அரங்கில் ஈடு இணையற்ற அழகைச் சேர்த்தவர். பண்டைத் தமிழர் தம் வரலாறு, பண்பாடு குறித்துப் பற்பல ஆய்வுகளையும், அகழ்வாராய்ச்சிகளையும் மேற்கொண்டவர். அதன்மூலம் உலக மொழிகளிலெல்லாம் மூத்ததாய் இருக்கக் கூடும் என உலகிற்கு அறிவித்தவர். 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் […]

மேலும்....