செயலி

ஸ்மார்ட் போன்கள் சூடாவதைத் தவிர்க்க எளிமையான குறிப்புகள்! ஸ்மார்ட் போன்களை அதனுடன் வழங்கப்படாத மின்னேற்றிகளால் மின்னேற்றம் செய்யும்போது மின்சாரம் சீரற்ற முறையில் செலுத்தப்படுவதால் சூடாவதோடு பல்வேறு இதர பிரச்சினைகளும் ஏற்படலாம். எனவே, இதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளை சீராக புதுப்பித்துக் கொள்வதும், மேலும் பயன்படுத்தாத செயலிகள் பின்னணியில் இயங்குவதைத் தடுக்க அவற்றை கைப்பேசியிலிருந்து நீக்கிவிடுவது (Uninstall) நல்லது. இணையத்தை பயன்படுத்தாதபோது மொபைல் டேட்டாவை அணைத்துவிட வேண்டும். மேலும், இருப்பிடம், ஜிபிஎஸ், ப்ளூடூத், வைஃபை […]

மேலும்....

என்.வி. நடராசன்

பகுத்தறிவுக் கண்கொண்டு பார்த்து கருத்துகளைக் கூறும் திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி.நடராசன் அவர்கள். அவர் பிறந்தது 12.11.1912. பெற்றோர் விசயரங்கம், தனலட்சுமி ஆகியோர் ஆவர். இந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது. இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என். சோமுதான் அந்தக் கைக்குழந்தை. பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.) சிறைக்கோட்டம் சென்றவர். ‘திராவிடன்’ என்னும் இதழை நடத்தி வந்தார். திமுக.வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலையச் […]

மேலும்....

குறும்படம்

MR. COBBLER எல்லா மனிதர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் மனிதநேயவாதிகளின் இலக்கு. ஆனால், இன்றும் அது முழுமையடைவதில் மனத்தடைகள் சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒருவரை கதாபாத்திரமாக்கி அவரையும் ஒரு சிறு குழந்தை மாற்றுவதாக இந்தக் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சாலையோரம் செருப்பு தைத்துக்கொண்டிருக்கும் ஒருவரிடம் தன் பூட்சை காலோடு நீட்டி பாலிஸ் போடச் சொல்கிறார் ஒருவர். அதேநேரத்தில் ஒரு சிறுமி தன்னுடைய பூட்சுக்கும் பாலிஸ் போட பூட்சை காலிலிருந்து கழட்டிக் கொடுக்கிறாள். அதைப் பார்த்து காலோடு […]

மேலும்....

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செல்போன்களை சார்ஜ் செய்யலாம்!

தற்போது ஒரு நாளைக்கு இருமுறையோ அல்லது பயன்பாட்டைப் பொறுத்து பல முறைகளோ உங்கள் செல்போன்களை சார்ஜ் செய்கிறீர்கள். ஆனால், தற்போது மூன்று மாதங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே சார்ஜ் செய்து பயன்படுத்தும் அளவிற்கு விஞ்ஞானிகள் ஒரு உபகரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த உபகரணத்தைப் பயன்படுத்துவதால் செல்போன்கள் தற்போது இயங்குவதற்குப் பயன்படுத்தப்படும் சக்தியைவிட 100 பங்கு குறைவான சக்தியையே பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும். ‘மெக்சிகன்’ மற்றும் ‘கார்நெல்’ பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காந்த மின்புல பல்முனைச் செயல் […]

மேலும்....

கனவுகளின் மிச்சம்

நூல்: கனவுகளின் மிச்சம் (ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு) ஆசிரியர்: அருணன் வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம், 69-24ஏ, அனுமார்கோயில் படித்துறை, சிம்மக்கல், மதுரை – 625001. பேசி: 0452-2621997, 9442261555 பக்கங்கள்: 288     விலை: ரூ.200/- தோழர் அருணன் அவர்கள் சிறந்த மனிதநேயர். கொள்கைப் பிடிப்பும், அதன்வழி நிலைத்து நின்று பணியாற்றும் தகமையும் உடையவர். அவர் எழுதிய நூல்கள் அதுசார்ந்த சூழல்கள், தேடல்கள், கட்சிப் பணிகள், கட்சியின் கொள்கைச் செயல்பாடுகள் சார்ந்த தன் கருத்துகள் என்று எல்லாவற்றையும் இந்நூலில் […]

மேலும்....