வண்புணர்வு செய்யப்பட்டவள் வாக்கு மூலமே போதும் !

    Amendments in Rape Law  2013 என்ற வகையில் பலாத்காரம் செய்திட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் அதற்கான காயங்கள் இருக்க வேண்டிய தேவை இல்லை. அந்தப் பெண்ணின் வாக்கு மூலமே நீதிமன்றத்தில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திட போதுமானது என்ற முக்கிய திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. மது பூரனிஈஷ்வர் என்ற சமூக ஆர்வலரும், கற்பழிப்பு குற்றஞ் சாட்டப்பட்ட 2 குற்றவாளிகளும் இந்த சட்டத் திருத்தம் சில பெண்களால் தவறுதலாக பயன்படுத்தப்பட்டு சில அப்பாவி இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் […]

மேலும்....

நூல் அறிமுகம்

      தலைப்பு: நவோதயா கல்வித் திட்டம் கூடாது ஏன்?ஆசிரியர்: கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலுவெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு, 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல், சென்னை-600 007.பக்கங்கள்: 16      விலை: ரூ.10/- நீண்ட காலம் கல்வித் துறையில் பணியாற்றி கல்வியை அனைத்து மக்களுக்கும் பரவலாக்கம் செய்ததில் பெரும்பங்கு வகித்தவரான கல்விநெறிக் காவலர் நெ.து.சு. அவர்கள் 1986இல் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் ஆற்றிய உரையின் நூல்வடிவம். நவோதயா கல்வி முறை தமிழ்நாடு […]

மேலும்....

செயலி

      ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு அப்புத்தகத்தின் சக வாசகர்களுடன் அதுபற்றி விவாதித்தால்தான் வாசிப்பு அனுபவம் முழுமையடையும். இந்தச் செயலியில், புத்தகப் புழுக்கள் தாங்கள் படித்த, ரசித்த புத்தகம் தொடர்பான குழு முன்பே இருப்பின் அக்குழுவில் சேர்ந்து கருத்துத் தெரிவிக்கலாம். ஒருவேலை அக்குழு முன்பே இல்லை எனில் அப்புத்தகம் தொடர்பான புதிய குழுவை உருவாக்கிக்கொண்டு அதுபற்றி விவாதிக்கலாம். இந்தக் குழுவில் சேருமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். நாம் விவாதிக்க விரும்பும் புத்தகங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு கருத்து […]

மேலும்....

குறும்படம்

                                                              இதுவும் கடந்து போகும்ஜாதி, தீண்டாமைக் கொடுமை ஈழத்தில் எப்படியிருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறது இந்தக் குறும்படம். துணி வெளுப்பவர் மிதிவண்டியில் தன் மகளை அமர்த்தியபடி வீடுவீடாகச் சென்று கேட்டுக் கேட்டு துணிகளை வாங்கி வருவதில் தொடங்குகிறது கதை. ஒரு வீட்டில் தன் மகளுக்கு விக்கல் வந்துவிட்டதால் தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் தேங்காய் சிரட்டையில் வருகிறது. சிறுமி அதில் குடிக்க மறுத்துவிடுகிறாள். அவமானப்பட்ட அந்தத் தந்தை மவுனமாக தன் மகளை அழைத்துக்கொண்டு திரும்புகிறார். […]

மேலும்....

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

      பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பிறந்தவர். இவர் பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யறிவு ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்றவர். இவர் சட்டம் பயின்று கோவையில் வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவி சாரதாமணி மற்றும் மகள் உமா, மகன்கள் செந்தில்,  குமார் ஆகியோர் உள்ளனர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறன் வாய்ந்தவர். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் […]

மேலும்....