மலம் எடுப்போர் வாழ்வை மாற்றி அமைக்கும் மாணவர்!

  சென்னை கிறித்தவக் கல்லூரியின் சமூக சேவைப் பிரிவைச் சேர்ந்த மாணவர் கே.சதீஷ் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர். இவருடைய வயதோ வெறும் 22தான். புறக் கவர்ச்சிகளிலும், பாலினக் குறும்புகளிலும் ஈடுபட்டு விளையாட்டாகப் பொழுதைக் கழிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இடையே இவர் ஒரு அற்புதம் மட்டுமல்ல! ஆக்கப்பூர்வ செயல்திறனுடைய ஒரு சமூக விஞ்ஞானி நான் என்பதை மிக அடக்கமாகக் காட்டியுள்ளார். கண்ணகி நகர் என்றாலே துப்புரவாளர்கள் நிறைந்த இடம் என்பதுதான் அனைவருக்கும் நினைவிலாடும். ஆம். அந்த நகரத்தில் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் … இயக்க வரலாறான தன்வரலாறு (178)

சமூக உரிமை காப்பதில் தமிழகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்! 30.09.1980 அன்று உடுமலைப்பேட்டையில், கோவை மாவட்ட பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டு விளக்க வழிநடைப் படையை நான் துவக்கி வைத்து உரையாற்றினேன். பகுத்தறிவாளர்களும், திராவிடர் கழகமும் இணைந்து துவக்க விழாப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அக்கூட்டத்திற்கு அன்புச்சந்திரன், உடுமலை ஒன்றியத் தலைவர் தலைமை ஏற்றார். பொருளாளர் சுந்தரம், படைத்தலைவராக தி.நா.அறிவரசு, திருப்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.சுந்தரராசன், கோவை மாவட்ட அமைப்பாளர் ஆறுச்சாமி, கோவை மாவட்டச் செயலாளர் […]

மேலும்....

இந்த நூற்றாண்டில் உலகின் கடல் மட்டம் 3 மீட்டர் உயரும்!

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகின் கடல்மட்டம் 2100ஆம் ஆண்டிற்குள் 3 மீட்டர் உயர்வதைத் தடுப்பது மிகக் கடினம் எனக் கூறுகிறது. கரியமிலவாயு வெளியேற்றத்தைக் (சிஷீக்ஷீதீஷீஸீ-பீவீ-ளிஜ்நீவீபீமீ) குறைக்காவிடில் இந்நிகழ்விலிருந்து தப்ப முடியாது என எச்சரிக்கின்றனர். இது ஒரு விரும்பத்தகாத நிகழ்வுதான் என்றாலும் இதைத் தவிர்க்க இயலாது என்கிறார் ‘சைபர்ன் டிரிப் -ஹவுட்’ என்கிற பேராசிரியர். உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கத் தவறினால் இன்னும் சில நூறு ஆண்டுகளில் கடல்மட்டம் 10 […]

மேலும்....

சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்கு நல்லதா..?

  சமையலுக்கு ஆரோக்கியமான எண்-ணெயை நாம் பயன்படுத்த நினைக்கிறோம். ஆனால், எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதில் குழம்பிப் போகிறோம். சிலர் சூரியகாந்தி எண்ணெய் நல்லது என்கிறார்கள். வேறு சிலர் ஆலிவ் எண்ணெய் நல்லது என்கின்றனர். `கடலை எண்ணெய் இல்லாமல் சமையலா? என்றும் சிலர் கேட்கின்றனர். இவற்றுள் எது சரி? சமையலுக்கு எந்த எண்ணெய் நல்லது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், எண்ணெய் குறித்த சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. எண்ணெய் என்றாலே அது கொழுப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். […]

மேலும்....

டயரில் காற்றைச் சீராக வைக்கும் கருவி! பொறியியல் மாணவர் சாதனை!

வாகனங்களின் டயர்களில் ஒரே சீரான காற்று அழுத்தத்தை பராமரிப்பது மிகவும் கடினமான செயல். 15 சதவீத வாகன விபத்து களுக்கும், 40 சதவீத எரிபொருள் வீணாவதற்கும் காற்று அழுத்தம் சீராக இல்லாததே காரணம் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆர்எம்கே மாணவர் ஜி.தீபக் இதைச் சவாலாக ஏற்று வாகன டயர்களில் காற்றின் அழுத்தத்தை சீராகப் பராமரிக்கும் முறையை பரிசோதனை முறையில் செய்து வெற்றி கண்டுள்ளார். இதற்காக அவர் தமது கல்லூரி மூலம் காப்புரிமையும் பெற்றுள்ளார்.மேலும் ஆர்எம்கே […]

மேலும்....