தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்டோருக்கு திராவிடர் கழகம் ஒன்றும் செய்யவில்லையா?

[திராவிடர் கழகத்தையும் அதன் தலைவர்களையும் நோக்கி வீசப்படும் அவதூறுகள், பழிகள், புரட்டுகள் போன்றவற்றிற்கு பதிலளிக்கிறது இத்தொடர் ] தலைவர் தந்தை பெரியார் அவர்கள், “என்னுடைய இயக்கம், மக்கள் இயக்கம், மனிதநேய இயக்கம், பகுத்தறிவு இயக்கம், இந்த இயக்கத்தினுடைய தத்துவம் இரண்டே வார்த்தைகளில் சொல்லுகிறேன். அனை வருக்கும் அனைத்தும் அதாவது, எல்லார்க்கும் எல்லாமும் என்பது சமதர்மம். அதற்குப் பெயர்தான் மனித தர்மம். அதற்குப் பெயர்தான் சுயமரியாதை. இன்னாருக்கு இதுதான் என்று சொல்லுவதிருக்கிறதே அது மனுதர்மம்’’ என்றார். அப்படிப்பட்ட பெரியாரை, […]

மேலும்....

பெண்களிடம் அவசியமாய் இருக்க வேண்டிய அவசர உதவி எண்கள்

♦    தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண்:1091. திடீர் ஆபத்துகள் வரும் பொழுது பெண்கள் இந்த எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். எங்கே ஓர் இடத்தில் தனித்து விடப்பட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். 1091 என்ற இலவச அழைப்பு எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-_23452365 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். பெண் குழந்தை என்றால் 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். ♦    குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது […]

மேலும்....

தொலைநோக்குச் சிந்தனையில் தலைசிறந்த தந்தை பெரியார்! – (2)

  ஆண்களைப் போல பெண்களும் வாழவேண்டும்! தந்தை பெரியார் அவர்கள், “தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாக பெண்களையே முழுமையாக நியமிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்கள். “காரணம், தாய்தான் (பெண்கள்தான்) பிள்ளைகளின் முதல் ஆசிரியர். எனவே, அவர்களுக்கு கட்டாயம் கல்வி அளிக்கப்பட வேண்டும். பெண்கள் மட்டுமே 5ஆம் வகுப்புவரை ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்’’ என்று 1946இல் கூறினார். பெரியாரின் இக்கருத்தை 1992இல் அமைக்கப்பட்ட, பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக்குழு ஏற்று, “தொடக்கப் பள்ளிகளில் பெண்களே ஆசிரியர்களாகப் பணியில் அமர்த்தப்பட வேண்டும் […]

மேலும்....

நீதிமன்றம் சென்று ‘நீட்’ தேர்வை ஒழிப்போம்!

கே:    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கேரளா சாதித்ததை தமிழக அரசு செய்யத் தயங்குவது ஏன்? அவர்களைத் தடுப்பது எது?                     – சீ.இலட்சுமிபதி, தாம்பரம் ப:    எடப்பாடி அரசு ‘அம்மாவின் அரசு’ என்றும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நிலை உண்மையென்றால், அவர்கள் சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதி (Assurance committee) சட்டப்படி செயல்படுத்த வேண்டும். இதில் போதிய கவனஞ்செலுத்திட துணிவோ, தெளிவோ இதுவரை இவர்களிடம் ஏற்படவில்லை. எனவே, தொடர் போராட்டங்கள் தவிர்க்க […]

மேலும்....

‘குடிஅரசு’ தரும் வரலாற்றுத் தகவல்கள் 1 சங்கீதமும் பார்ப்பனியமும்

  சென்னை சங்கீத மகாநாட்டில் பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான் ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு நாணயக் குறைவாயும் குற்றமாயும் நடந்து கொண்டிருக் கின்றார்கள் என்பதை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கும் நிரூபத்தால் அறியலாம். இவற்றை நமது பார்ப்பனரல்லாத பிரபுக்கள் சற்றும் லட்சியம் செய்யாமல் பார்ப்பனரல்லாத வித்வான்கள் எவ்வளவு பாண்டியத்த முடையவர்களாயிருந்தாலும் அதை லட்சியம் செய்யாமல் பார்ப்பனர்கள் என்கின்றதற்காகவே அவர்களை ஆதரிக்க முற்படுகிறார்கள். நமது நாட்டுப் பிரபுக்களின் முட்டாள் தனத்திற்கு இதைவிட வேறு ஆதாரம் […]

மேலும்....