அறிவுலக மேதை இங்கர்சால்

பகுத்தறிவு உலகத்தின் ஒப்பற்ற பரப்புரையாளர் அமெரிக்க நாட்டின் ‘இல்லியனாய்’ மாநிலத்தில் பிறந்த கர்னல் ராபர்ட் கிரீன் இங்கர்சால் அவர்கள் ஆவார்கள்.19ஆம் நூற்றாண்டின் பார்புகழ் பகுத்தறிவு மேதையான அவர் கூறுகிறார்: “உலகத்திலேயே அதிமுக்கியமான விஷயம் சுதந்திரம். அது உணவை விட, உடையை விடப் பெரியது; செல்வத்தை விட, வீடுகளை விட, நிலங்களை விடப் பெரியது. சிற்பம், ஓவியம், கலைகள் யாவற்றிலும் உயர்ந்தது. எல்லா மதங்களைக் காட்டிலும் சுதந்திரமே நனி சிறந்தது. இத்தகைய இணையிலா மதிப்புடைய மனித சுதந்திரமெனும் மரகதத்தைக் […]

மேலும்....

செரிமானக் கோளாறு போக்கும் வெற்றிலை!

வெற்றிலை… தொன்றுதொட்டு நாம் பயன்படுத்திவரும் மூலிகைகளுள் ஒன்று. திருமணம், சடங்கு என எல்லா மங்கல நிகழ்வுகளிலும் வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக, வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி சேர்த்து தாம்பூலம் தரிப்பது தமிழர்களின் வழக்கமாகும். தாம்பூலம் தரிப்பதால், உண்ட உணவு எளிதில் செரிமானமாகும். குறிப்பாக, வயிறு முட்ட உண்ணும்போதும், அசைவ உணவுகள் உண்ணும்போதும் தாம்பூலம் தரித்தால் எளிதில் செரிமானமாகி, வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாமலிருக்கும். அத்துடன், வயிற்றில் வாய்வுக்கோளாறு […]

மேலும்....

அடித்தட்டு மக்களின் மீதான அதிரடித் தாக்குதலே. G.S.T.

“கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டில் வாழ்வதினும், கடும்புலி வாழும் காட்டில் வாழ்வதே மேல்’’ என்று ஒரு கூற்று உண்டு. இந்தக் கூற்று இன்றைய மோடி அரசின் குடிமக்களுக்கு மிகவும் பொருந்தக் கூடியதே! இவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அமல் செய்துவரும் சட்டங்களால் மக்கள் மீண்டதினும் மாண்டதே அதிகம். பசுப் பாதுகாப்பு, மாட்டுக்கறித் தடை, இறைச்சிக் கடைகளை இழுத்து மூடியதோடு, பசுப் பாதுகாவலர்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு கொக்கரித்து எழுந்தமையால், 25க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, […]

மேலும்....

கடற்கரை கபடி வீரமங்கை அந்தோணியம்மாள்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகாவில் உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தில் பிறந்தவர் அந்தோணியம்மாள். கடந்த மார்ச் 19 மற்றும் 20 தேதிகளில் தென்னாப்பிரிக்காவின் மொரிஷியஸ் தீவில் நடைபெற்ற முதல் சர்வதேச பீச் (கடற்கரை) கபடியில் தங்கம் வென்றார். இவர் தன்சாதனை பற்றிக் கூறுகையில், “எங்க குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம். எங்க அப்பா சவரிமுத்து ஒரு பால் வியாபாரி. அம்மா ரீத்தாமேரி வீட்லதான் இருப்பாங்க. அப்பப்ப எதாச்சும் கூலி வேலைக்குப் போவாங்க. என் கூடப் பொறந்தவங்க மூன்று பேர். […]

மேலும்....

டாக்டர் முத்துலட்சுமி நினைவு நாள் ஜூலை 22

இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகிய  (Doctor) முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் ஜூலை 22. இன்னொரு சிறப்பும் இவருக்கு உண்டு. உலகளவில் சட்டமன்ற துணைத் தலைவராக வந்த முதல் பெண்மணியும் இவரே. பெண்கள் அந்தக் காலத்தில் அதுவும் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால், அது சாதாரணமான ஒன்று அன்று. புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு அனுமதி பெற்று கல்லூரியில் சேர்க்கப்பட்டார். சென்னை மருத்துவக் கல்லூரியில் தன்னந்தனியான பெண்ணாகப் படித்துத் தேர்ந்தார். மேற்படிப்புக்காக லண்டன் சென்ற சிறப்பும் இவருக்கு உண்டு. […]

மேலும்....