அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

      இதுதான் பாரதப் பெருமை புத்தர் தம் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கிய காலத்தின் சமூக, அரசியல், ஆன்மிகத் துறைகளில் வரம்பு மீறிய ஒழுக்கக் கேட்டில் ஆரிய இனம் மூழ்கித் திளைத்தது. மது அருந்துவதுபோல் சூதாட்டமும் ஆரியரிடையே பரவிக் கிடந்தது. இவற்றை மாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் பல. அதனால்தான் புத்தரைச் சீர்திருத்தவாதி என்றார் அம்பேத்கர். பிரம்ம ஜலசுத்தா எனும் நூல் புத்தரின் முயற்சிகளை விவரிக்கிறது. முன்மாதிரியாக வாழ்ந்தவர் மட்டுமல்லர், புத்தர். சமூகத்தில் வாழ்ந்த சாதாரண […]

மேலும்....

+2 மாணவர்கள் படிக்க ஃபேஷன் டிசைனிங் டிப்ளமோ!

நிப்ட் கல்வி நிலையத்தில் டிப்ளமோ படிப்புகளைப் படிக்க விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை தரமணியில் செயல்பட்டுவரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி (நிப்ட்) கல்வி நிலையத்தில் பேஷன் பிட் அண்ட் ஸ்டைல், பேஷனல் ரீடெய்ல் ஸ்டோர் ஆபரேஷன்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். இந்தப் படிப்புகளில் சேருவதற்கு வயது வரம்பு இல்லை. ஃபேஷன் துறையில் 2 அல்லது 3 ஆண்டுகள் அனுபவம் […]

மேலும்....

நீயா-நானா?

தொலைக்காட்சிகளில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள்! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமே கிடையாது. இருக்க வேண்டியதுதான். அதில் பொருளும் இருந்தால் பயனாக இருக்குமே! பொருள், கருத்து என்று பேசுவதெல்லாம் பொருளற்றது; ஜாலியாக இருக்க வேண்டும் என்று ஜாலியாகப் பேசுவோர் உண்டு. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி _ மறக்க முடியாத நிகழ்ச்சி!ஜூன் 4ஆம் தேதி அது அரங்கேற்றியது. “நீயா நானா?’’ நிகழ்ச்சிதான் அது. வழக்கம்போல் கோபிநாத்துதான் ஒருங்கிணைப்பாளர். பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் தொங்குவது பற்றிய சர்ச்சை அது. […]

மேலும்....

வளரும் விஞ்ஞானத்தால் தகரும் மூடநம்பிக்கைகள்!

ஒன்பது கோள்களின் இயக்கம் நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று கருதி, கணக்கிட்டு சோதிடம் கணித்தனர். வெறுங்கண் களால் பார்த்து கண்டறியப்பட்ட கிரகங்களின் இயக்கங்களைக் கொண்டு, சோதிடம் கணிக்கப் பட்டது. ஆனால், அறிவியல் வளர வளர புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கிரகங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால், சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உருவாக்கப்பட்ட சோதிடம் எப்படிச் சரியனாதாகும்? சில கோள்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உருவாக்கப்பட்ட சோதிடத்தில், விடுபட்ட கோள் களின் தாக்கம், பங்கு விடுபட்டுவிட்ட நிலையில் சோதிடமே […]

மேலும்....

மாயவரம் சி. நடராசன் நினைவு நாள் 10.07.1937

“பணம், காசைப்பற்றியோ தண்டனைகளைப் பற்றியோ, துன்பம் தொல்லைகளைப்-பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்-படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி’’ என்று ‘குடிஅரசு’ இதழால் பாராட்டு வழங்கப்பட்டவர் மாயவரம் சி.நடராசன். பள்ளிப் படிப்பு அதிகம் கிடையாது. அவர் சென்னையில் ஒரு ஆங்கிலோ இந்தியன் வீட்டில் தங்க நேரிட்ட சூழ்நிலையில் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து கட்டுரைகளை குடிஅரசுக்குத் தந்தவர்.அந்தக் காலத்தில் தந்தை பெரியார் பேசுகிறார் என்றால், எதிரிகள் பல […]

மேலும்....