வாசகர் மடல்

தி.காயத்திரி,பரங்கிப்பேட்டை உண்மை ஆசிரியருக்கு வணக்கம்! ஜூன் 01.06.2017 அன்று வெளிவந்த தனி இதழ் ‘உண்மை’ என்ற புத்தகம். மக்களின் விழிப்புணர்வு, நம்பிக்கை, தெளிந்த நல்லறிவு, சிந்திக்கும் திறன், சட்டம் பற்றிய தகவல்கள், சாமியார்களின் மூடப் பழக்கங்கள், மக்களை ஏமாற்றும் திறமைகள், அரசியல் ஆட்சி முறைகளும் அவர்கள் இனவாரியாக மக்களுக்கு செய்யும் சதியினையும், இந்துமத தகவல்கள், அறிவியல் வளர்ச்சி, இளமைத் திருமணம், கடவுளின் மூலம் நோய் சரியாகும், காவி ஆடை அணிந்து சாமியார்கள் செய்யும் கொடுமை இதற்கு அரசின் […]

மேலும்....

பனகல் அரசர் பிறந்த நாள் 09.07.1866

பனகல் அரசர் சென்னை மாகாணத்தில் ஆறு ஆண்டுகாலம் நீதிக்கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு அவர் காட்டிய ஆர்வமும் ஆற்றிய ஆக்கரீதியான செயல்களும் அளப்பரியன. அரசு நிர்வாகத்தை மிகச் சிறப்பாக நடத்தியவர். மருத்துவத் துறை பெரும்பகுதி வெள்ளையர் ஆதிக்கத்திலும், அடுத்து பார்ப்பனர் ஆதிக்கத்திலும் இருந்த நிலையில் அதன் முக்கிய பொறுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை நியமித்து ஓரளவு அந்த ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியவர். சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவை அடியோடு அழிந்து போகவிருந்த நிலையில், அவற்றிற்கு ஆதரவு காட்டி உயிர்ப்பித்தவர். […]

மேலும்....

பிள்ளை வரம்

“என்ன, மருமகள் சாந்திக்கு ஏதேனும் விசேஷம் உண்டா? ஆறுமாசம் ஆயிடுச்சே’’காவேரியிடம் இந்தக் கேள்வியை கேட்காதவர்களே இல்லை. வெளியில் சந்திக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றாலும் சரி, இந்தக் கேள்வியைத் தவறாமல் எல்லா பெண்களுமே கேட்காமல் விடமாட்டார்கள். தனது மகன் சுந்தருக்கும் சாந்திக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. திருமணமான இரண்டாவது மாதத்திலிருந்தே இந்தக் கேள்வியை பலரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பதில் சொல்ல முடியாமல் திணறினாள் காவேரி. இதனால் காவேரி வீட்டைவிட்டு வெளியில் செல்லாமல் […]

மேலும்....

இனி சான்றிதழ்கள் தொலையாது….

இந்திய அரசின் டிஜிட்டல் லாக்கரில் பத்திரப்படுத்தலாம் அரசு நிர்வாகத்தை மேலும் எளிமையாக்கி, காகித வடிவிலான ஆவணங்கள் பயன்பாட்டின் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் லாக்கர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகளில் லாக்கர் வசதியைப் பயன்படுத்துவது போல இணையத்தில் இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியைப் பயன்படுத்தலாம்.இந்திய மக்கள் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த முடியும். உங்களது சான்றிதழ்கள், அரசு வழங்கும் டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவற்றை இந்த டிஜிட்டல் லாக்கரில் சேமிக்கலாம். இந்த லாக்கரில் […]

மேலும்....

மறைமலை அடிகள் பிறந்த நாள் 15.07.1876

தனித்தமிழ் எனும் சொல்லுக்கு வித்திட்ட காரணத்தால் தனித் தமிழ்த் தந்தை என அழைக்கப் பட்டவர். நாகப்பட்டினம் அருகே கடம்பாடி எனும் சிற்றூரில் பிறந்த மறைமலையடிகளின் தந்தை பெயர் சொக்கநாதப் பிள்ளை, தாயார் சின்னம்மை. மறைமலையடிகளின் இயற்பெயர் வேதாசலம். தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாகத் தன் பெயரை வேதம் = மறை, சலம் = மலை எனும் அடிப்படையில் மறைமலை என்பதாக அவர் மாற்றிக்கொண்டார். நாளடைவில் இதுவே மறைமலையடிகள் என அழைக்கும்படி ஆனது. நாகப்பட்டினத்தில் வெ.நாராயணசாமிப் பிள்ளை […]

மேலும்....