வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
ஒருவந்தம் இது வள்ளுவர் வெருவந்த செய்யாமை என்னும் அதிகாரத்தில், “வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்ஒருவந்தம் ஒல்லை கெடும்’’ என்ற குறட்பாவில் வந்துள்ளது, இக் குறட்பாவிற்கு உரை கூறவந்த பரிமேலழகர். ஒருவந்தம் (அரசன்) ஒரு தலையாக என்று கூறி அவரே, விரிவுரையில் ஒருவந்தம் ஏகாந்தம் என்பன ஒரு பொருட் கிளவி என்று குறித்தார். ஏகாந்தம் என்பதிலுள்ள ஒரு என்பதை ஏகம் என்றும் அந்தம் எனப் பிரித்துக் கொண்டதை வடசொல் என்றும் அவர் நம்மை எண்ணச் செய்கின்றார். ஒருவந்தம் என்பதை […]
மேலும்....