வெல்லப் பொங்கலில் விழிப்பு பெறுவோம்!

எடையைப் பெருக்காமல்ஏற்றதை உண்ணும்எளியவன் அறிவாளி! நூறாண்டு வாழ்வதற்கானஉணவுப் பட்டியல்…நாட்காட்டிக்கு அருகில்நாளும் தெரியுது! விரைவு உணவைவெறுத்து ஒதுக்கிமரபு உணவைமகிழ்ந்து உண்போம்! நொறுக்குத் தீனிசாவை அழைக்கும்குறுக்குத் தடம்! பசிக்கு உண்டவன்ருசிக்குத் தின்றபோதுபிணி தொற்றிக் கொண்டது!அலமாரிகளில் நிரம்பி இருக்கின்றமருந்துக் குப்பிகள்… மாத்திரைகள்…தூக்கி எறிவோம்! மதில் கட்டி அகழி வெட்டிமனிதனைக் காக்கும்மிளகும் தேனும்! புத்தாடையை போடுவோம்பொங்கல் நாளில்!பழையவற்றைப் போடாதேபோகித் தீயில்!பகுத்தறிவுத் தீயில் எரியட்டும்மனுவும் கீதையும்! மெல்லினம் வல்லினம்உயர்ந்தவர் தாழ்ந்தவர்சொல்லிய பேதம்கெல்லி எறிவோம்!சமத்துவம் பொங்கசமவுரிமை ஏந்துவோம்! கவிஞர் கண்ணிமை  

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கேடு நீங்கியது! கூடுதல் கிடைத்தது!   இயக்க வரலாறான தன்வரலாறு (170) பிற்படுத்தப்பட்டோர் பேராபத்தைத் தகர்த்து பெருமை பெற்றது நம் கழகம்! நமது விளக்கத்தினைக் கூர்ந்து கவனித்து உண்மைகளை உணர்ந்த தமிழக முதல்வர் மாண்புமிகு எம்ஜி.ஆர். அவர்கள்,  அதன் விளைவாய் 24.01.1980 அன்று காலை செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாய் தகவல் தரப்பட்டது. செய்தியாளர்களை சந்திக்கும் முன் அமைச்சரவையின் ரகசியக் கூட்டம் நடந்தது. பின் செய்தியாளர் அறைக்கு வந்த முதல்வர் தனது தாமத வருகைக்காக மன்னிப்பு கோரி அறிவிப்புகளைத் தொடர்ந்தார். […]

மேலும்....

செந்தமிழச் சான்றோர் சித்தர்!

சித்தர்தம் பாடல் யாவும்    சிந்தனை கருவூ லங்கள்;நித்தமும் போற்றிக் கற்போர்    மும்மலம் நீங்கப் பெற்றோர்;பித்தமும் அகலும், பொய்மைச்    சடங்குகள் பிடிவிட் டோடும்;உத்தம குணங்கள் ஊன்றும்;    உன்னதம் வாழ்வில் தோன்றும்! சித்துக்கள் செய்தோர் அல்லர்;    மக்களைத் திசைதி ருப்பும்வர்த்தக தவவே டத்தில்    வன்மங்கள் புரிந்தோ ரல்லர்;முத்தியும் வேண்டார், சாதி    மதங்களின் முடைய றுத்துச்சித்தத்தை நேர்நி றுத்தி    சிவமய மானோர் சித்தர்! எதுதெய்வம்? அதுஎன் செய்யும்?    இறையருள் என்ப தென்ன?மதியிலா  மூடர்  தங்கள்    மனத்திலும் பதிய, ‘வேதம்கதைகட்டி, கானல் நீரைக்   […]

மேலும்....

வாழ்வில் இணைய…

வயது 32, M.sc., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ. 42,000/_- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 31,D.I.T.B.sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 33,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 27, B.E…C.sc., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.70,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் […]

மேலும்....

மோடியை ‘விளாசிய’ போர்ப்ஸ் பத்திரிக்கை

ரூபாய்த் தடை – மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் செயல்! பிரதமர் மோடியின் ரூபாய் ரத்து அறிவிப்பு என்பது மக்களின் சொத்துக்களை கொள்ளை-யடிக்க போட்ட திட்டம், ஒழுக்கமற்ற செயல். கடந்த 1975_-77ஆம் ஆண்டுகளில் இந்திராகாந்தி கொண்டு வந்த அவசர நிலையைப் போன்றது என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை விமர்சித்துள்ளது. போர்ப்ஸ், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வணிகம் தொடர்பான பிரபல வாரப் பத்திரிகை ஆகும். இந்தப் பத்திரிகை இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதை கடுமையாக விமர்சித்துள்ளது.போர்ப்ஸ் […]

மேலும்....