சாமியார் என்ற கவசத்துள் சதிவேலைகள்! சரச லீலைகள்!

      சாமியார்கள் என்றாலே அவர்கள், “நெஞ்சினில் நஞ்சு வைத்து நாவில் அன்பு காட்டி’’ ஏமாற்றுகிறவர்கள் என்றே பொருள். இதில் போலிச் சாமியார், நல்ல சாமியார் என்பதெல்லாம் அறியாமை! எல்லாம் போலிகள்தான்.மாட்டிக்கொண்ட சாமியார், மாட்டிக்கொள்ளாத கெட்டிக்கார சாமியார் என்று வேண்டுமானால் சொல்லலாம். “காவிக்குள் ஒடுங்கியகாம ஆமைகள்!காலத்தை எதிர்நோக்கும்கபட ஊமைகள்!வாய்ப்பிற்காய் வாலசைக்கும்மோப்ப நாய்கள்!வளைக்காமல் சொன்னால்வக்கிர நோய்கள்!’’என்று சாமியார்கள் பற்றியும், “மன்மத பீடம்மடமையின் கிடங்கு!விட்டில் பெண்களைவிருந்தாய் அருந்தும்விசித்திர விடுதி!உள்ள அழுக்கைதப்பினை மறைக்கதவவேடம் புனையும்ஒப்பனைக் கூடம்’’ என்று சாமியார்களின் மடங்கள் […]

மேலும்....

மாநில அளவில் தங்கம் வென்ற மாற்றுத் திறனாளி எழிலரசி!

      சாந்தி மலர் -_ ராஜேந்திரன் தம்பதியினரின்  ஒரே மகளான எழிலரசி சென்னை ஆவடியில் மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் பங்கேற்றுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 400 புள்ளிக்கு, 339 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர்தான் தமிழகத்தின் முதல் பெண் மாற்றுத்திறனாளி பாராஷூட்டர். காஞ்சிபுரம் சொந்த ஊர். பிறக்கும்போது எவ்வித குறைபாடும் இல்லாமல் பிறந்திருந்தாலும், இவருடைய இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு செயல் […]

மேலும்....

”பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இல்லை!”

      கே:    வெளிநாடு வாழ் தமிழர்களிடம் உள்ள விழிப்புணர்வும், ஒற்றுமையும் இங்குள்ள தமிழர்களிடம் காண முடியவில்லையே ஏன்?     – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப:    என்ன செய்வது, அவர்கள் அங்கிருப்பதால் ‘கெட்டுப்போன ரத்தம்’ அவர்கள் உடம்பில் ஓடவில்லை; இங்கு அப்படி இல்லையே! கே:    ஆசாராம், ராம் ரஹீம் போன்ற சாமியார்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கோடிக்கணக்கில் சொத்துகள், சொந்தமாக ஆயுதக் கிடங்குகள், ஆயுதங்களைக் கையாளும் சீடர்கள் என்று பெரிய அளவில் வளர்ந்ததற்கும், அவர்கள் […]

மேலும்....

அய்ரோப்பிய நாடுகளில் பேருந்துப் பயணம்

ஜெர்மனி நாட்டில் கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றவர்களில் நானும் ஒருவன். மாநாட்டில் கலந்துகொள்ள 26.7.2017 புதன்கிழமையன்று சென்னையிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரை அடைந்தோம். மழைச்சாரல் எங்களை வரவேற்றது. எங்களை அழைத்துச் செல்ல பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் ஸ்வென் என்பவர் வந்திருந்தார். அவர் எங்களை வரவேற்று எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு […]

மேலும்....