`நீட்’ தேர்வு நிரந்தரமாய் நீக்கப்பட் வேண்டும்!

“நீட்’’ தேர்வு கல்லூரிப் படிப்புகளுக்கான தகுதித் தேர்வு என்ற நோக்கில் கொண்டுவரப்-பட்டது அல்ல. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அடுத்தத் தலைமுறையைத் தலைதூக்க விடாமல் அழுத்தி அடிமையாக்கும் சூழ்ச்சிகள் அதில் அடக்கம். சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்கலாம் என்ற ஒரு சூழ்ச்சியான நிபந்தனை வைத்து பார்ப்பனரைத் தவிர மற்றவர்கள் மருத்துவம் படிக்க இயலாத நிலையை உருவாக்கியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள். தந்தை பெரியாரின் முயற்சியால் நீதிக்கட்சியின் ஆட்சியால் அது விலக்கப்பட்டு அனைவரும் மருத்துவம் பயில வாய்ப்பு வந்தபின், குலக்கல்வியைக் கொண்டுவந்து […]

மேலும்....

கற்பிழந்த மாரியம்மா!

  நமது நாட்டில் நம்மால் வணங்கப்படும் கடவுள்கள் எல்லாமுமே ஆரியக் கடவுள்கள் என்பதைப் பற்றிய உண்மையில் யாருக்குமே மறுப்பு இருக்காது. இந்தக் கடவுள்கள் ஆரியக் கடவுள்கள் என்பது மாத்திரமல்லாமல், இக்கடவுள்கள் _ ஆண் பெண் கடவுள்கள், அவர்களது மனைவி மக்கள், அவதாரங்கள், மூர்த்தி கரங்கள் யாவுமே ஒழுக்கக் கேடு, நாணயக் கேடு, கற்புக் கேடு ஆகிய இழிவான குற்றங்களுக்கு உட்பட்டவையாகவே இருந்து வருகின்றன. இந்த விஷயங்களில் ஆரியர்களுக்கு மானம், வெட்கம், இழிவு இல்லையானதால், அவர்கள் அந்த நடத்தைகளையே […]

மேலும்....

திராவிடரா? தமிழரா?

‘தமிழர்’ என்பவர்கள் ஏதோ திராவிடர் என்பவர்களுக்குப் பகைவர்கள்போல், சில அரசியல் கடை திறந்திருக்கும் புதிய வியாபாரிகளும், அரை வேக்காடுகளும் பக்குவமில்லாத, வரலாறு தெரியாத இளைஞர்களை திசைதிருப்ப முயலுவது அசல் கேலிக்கூத்து ஆகும். “திராவிடர் _ திராவிடம் என்பதும், தமிழ் உணர்வு என்பதும் எதிரானவைகள் அல்ல. மொழியால் தமிழராக உள்ள “சூத்திரர் _ பஞ்சமர் _ கீழ்ஜாதி’’ என்று ஒதுக்கப்பட்ட அனைவரும் என்னைப் பொறுத்தவரையில் திராவிடர் _ ஆரியரல்லாதவர். இது இரத்தப் பரிட்சையால் தேர்வு செய்யப்படுவதில்லை; அவர்களது பண்பாடு, […]

மேலும்....