பலாத்காரம் – மன்னிப்பா?

ஒரு அப்பாவிப் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்திடும் இரக்கமில்லா ஒரு மனித மிருகத்திற்கு நீதிமன்றம் கருணை காட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பது எந்த வகையில் நியாயம் ஆகும். அது எப்படி ஒரு பெண்ணின் வாழ்வை அழித்த மிருகத்திற்கு மன்னிப்பு கேட்கமுடியும் என்று நீங்கள் கோபப்படுவது எனக்குப் புரிகிறது. ஆனால் உண்மையில் இதுபோன்ற ஒரு வழக்கு டெல்லி அமர்வு உயர்நீதிமன்றத்தில் நீதி அரசர் எஸ்.பி.கார்க் அவர்கள் முன்னிலையில் வந்தது. குற்றவாளி குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த […]

மேலும்....

ஆணுக்கு நிகராய் குத்துச் சண்டையில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவி

ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை எல்லா துறைகளிலும் பெண்கள் பங்களித்து சாதனை படைத்து நிரூபித்துள்ளனர். ஆண்கள் மட்டும்தான் குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற உடல் வலிமை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற வளையத்தை உடைத்ததற்கான உதாரணங்களாக மேரி கோம், கர்ணம் மல்லீஸ்வரி போன்றவர்களைச் சொல்லலாம். பெரம்பலூருக்கு உட்பட்ட கிராமம் குன்னம். இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆ-ம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மாணவி மாநில அளவிலான பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் […]

மேலும்....

இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படையா?

இன்றைக்குள்ள அறிவியல் கண்டு-பிடிப்புகள் சில நூற்றாண்டுகால அறிவியலாளர்-களின் முயற்சியின் விளைவாகும். ஆனால், இந்துத்வா பேர்வழிகள், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இந்து மதமே அடிப்படை என்கின்றனர். வானூர்தி, உறுப்பு மாற்று அறுவை, குளோனிங் என்று எல்லாவற்றிற்கும் எங்கள் இந்துமதமே முன்னோடி என்கின்றனர். எனவே, இந்து மதம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையா? என்று அறிய வேண்டியது அவசியமாகிறது. அதன் அடிப்படையிலே இத்தொடர். ‘இந்து மதம் என்ன சொல்கிறது?’ உலகைப் படைத்தது கடவுளா?: ஆதியில் பிரமன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் […]

மேலும்....

அளவாக காபி அருந்தினால் அளவற்ற பயன்கள்!

காபி குடிப்பது உடம்புக்கு நல்லது என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு சிலர் அது உடம்புக்குப் பல்வேறு தீமைகளை உருவாக்கும் என்கிறார்கள். காபி நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு, உண்மையில், காபி நல்லதா? காபியில் என்னதான் இருக்கிறது?  ஒரு நாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்? எவ்வளவு குடிக்கலாம்? மூளையில் அடினோசின் (Adenosine) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது.  ஒரு […]

மேலும்....

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

“இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப் படுத்தப்பட்டிருப்பவையும் மனுஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும் இந்துக்களின் சட்டத் தொகுப்பாக அமைந்துள்ள இந்துச் சட்டங்கள் கீழ்ஜாதியினரை அவமதிப்பதாக இருக்கின்றன. மனித உரிமைகளை மறுப்பதாக இருக்கின்றன. இதன்பால் தனக்குள்ள ஆழமான, அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும் மதம் என்ற போர்வையில் சமூக ஏற்றத்தாழ்வை பொதித்து வருவதைக் கண்டித்தும் மனுநூலை எரிப்பது என இம்மாநாடு தீர்மானிக்கிறது’’ எனத் தீர்மானம் நிறைவேற்றி மனுநூலை எரித்தார். எரிக்கச் செய்தார்!அவர் எப்படி இந்துத்துவ அம்பேத்கர்? […]

மேலும்....