அனிதா நினைவேந்தல் நாள் ‘நீட்’டை நீக்க உறுதி ஏற்கும் நாள்!

  சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் (28.09.2017) அன்று மாலை 6.30 மணிக்கு, ‘நீட்’ என்னும் சமூக அநீதியால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட ‘தமிழ்த் தளிர்’ அனிதாவிற்கு நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வெள்ளம் அரங்கம் முழுவதும் உணர்வுபொங்க நிரம்பி இருந்தது. வரவேற்புரை: திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ‘நீட்’டை எதிர்த்து தமிழகத்திலும் உலகின் பல நாடுகளிலும் குறிப்பாக அய்.நா.மன்றத்தின் முன்னும் ஆர்ப்பாட்டம் […]

மேலும்....

மோடி அரசின் தண்டவாளத்துறையின் வண்டவாளங்கள்

வளர்ச்சி என்ற மோசடியான கவர்ச்சியைக் காட்டி, வாக்குகளைப்  பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக மோடி அரசில் வளர்ச்சியே இல்லையென்பதை பல்துறை வல்லுநர்கள் ஆதாரத்தோடு உறுதி செய்துள்ளனர். இதில் இன்னும் கேவலம் என்னவென்றால் பல துறைகளிலும் வளர்ச்சி குறைந்து பாழ்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நுழைத்து அத்துறைகளின் செயல்பாட்டினை அலைக்கழிக்கும் அவலம்தான் நாளும் அரங்கேறுகிறது. மக்களுக்குச் சேவையாற்றும் அத்தியாவசியத் துறைகளையும்கூட கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு காணிக்கையாக்கிட மோடி அரசு தயங்குவதே இல்லை. அத்தியாவசிய சேவைத் துறைகளில் ஒன்று ரயில்வே […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?

மிதிக்கப்பட்டு இறந்த பிள்ளை மீண்டும் உயிர்பெறுமா? பாண்டுரங்கனின் மீது தீரா அன்பு கொண்ட கோராகும்பரின் உதடுகள், சதா ‘பாண்டுரங்கா பண்டரீநாதா’ என்றே பஜனை செய்து கொண்டிருக்கும். பானை செய்ய களிமண் மிதிக்கும்போதுகூட தன்னை மறந்து ஸ்ரீ பாண்டுரங்கனின் பஜனைப் பாடல்களைப் பாடி ஆடியபடியே மிதிப்பாராம். அவரின் மனைவிதான் மண் இளகியதை கவனித்து அவரை நகர்த்துவாராம். ஒரு நாள், கோராகும்பர் மண்பானை செய்ய களிமண் மிதித்துக் கொண்டிருக்க, களிமண்ணில் விட நீர் கொண்டு வரக் கிளம்பும் மனைவி, தங்களின் […]

மேலும்....