உற்சாக சுற்றுலாத் தொடர் – 29

வெள்ளிப் பனிமலை : அலாஸ்கா கப்பல் பயணத்தின் மறக்க முடியாத காட்சி, கப்பலில் இருந்து வெள்ளிப் பனிமலையைப் பார்ப்பதுதான்! கப்பல் அங்கு செல்வதற்கு முன்னர் அமெரிக்க அரசின் பூங்கா காப்பாளர்கள் படகில் வந்து கப்பலில் ஏறிக்கொள்வார்கள். அவர்கள் அந்தப் பனிமலை பற்றிய முழு விவரங்களையும் தெரிவிப்பார்கள். வெறும் பனிமலையைப் பார்ப்பதைவிட அதைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அந்தப் பனிமலை உருவாகி வளர்ந்து வருகின்றது. அதன் அருகே கப்பல் சென்று அந்தப் […]

மேலும்....

செய்யக் கூடாதவை

அளவிற்கு அதிகமாய் பொருள் சேர்க்கக் கூடாது பணமாயினும், நிலமாயினும், பொருட்களாயினும், தேவைக்கு அதிகமாகச் சேர்ப்பது இன்னலையும், இடையூறையும் தரும். சேர்ப்பதற்கு அடையும் முயற்சியும், தொல்லையும்போல. காப்பதிலும் ஏற்படும். பெருமை கருதியும், தன் தகுதியைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் இவற்றை அளவிற்கு அதிகமாய் சேர்ப்பது அறியாமை. அளவிற்கு மிஞ்சினால் அது பாதிப்பையே தரும். தேவையில்லாத பொருட்களையெல்லாம் ஆடம்பரத்திற்காக வாங்கி அடுக்குவது பொருளாதாரக் குற்றம். அது நமக்கும் நல்லதல்ல சமுதாய வளர்ச்சிக்கும் உகந்ததல்ல. செயற்கைப் […]

மேலும்....

ஜான் வில்சன் எழுதிய “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன்  எழுதிய “India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது. வேதங்களின் நேர்மையான சிறந்த பகுதிகளை நாம் உற்று நோக்கும்போது, வேதகாலத்தில் ஜாதி இருக்கவில்லை என்ற முடிவிற்கு (ஊகம்) நாம் வருவது உறுதிப்படுகின்றது. 1. ‘பார்ப்பனர்கள்’ ஒருவகைத் தொழிற் பிரிவினராகவே குறிக்கப்படுகின்றனர். தனி ஜாதியாக அல்ல. மக்களிடமிருந்து அவர்கள் பிறப்பு (தோற்றம்) வேறுபட்டது என்பதனைக் குறிக்கும் ஒரு […]

மேலும்....

மாதாவிடாய் பற்றி அவசியம் அறிய வேண்டியவை!

சினைப்பையில் உருவாகும் கருமுட்டைகள், ஹார்மோன் சுழற்சிக்கு உட்பட்டு, முழு வளர்ச்சியடைந்து, உடைந்து, பின்னர் வரக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் முடிவில், கர்ப்பப்பையில் உதிரப்போக்கு ஏற்படுவதை மாதவிடாய் என்கிறோம். சினைப்பையின் செயல்பாட்டை மூளையின் உதவியோடு நாளமில்லாச் சுரப்பிகள் கவனித்துக்கொள்ளும். பொதுவாக, 9 _15 வயதுக்குள் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவார்கள் (முதல் தடவை மாதவிலக்கு ஏற்படுவது). இந்த வயதுக்குக் குறைவான / அதிகமான வயதில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவது இயல்பிற்கு மாறானது. சிலருக்கு நிகழக்கூடியது. அந்தச் சிறுமிகளை மருத்து-வரிடம் அழைத்துச் சென்று, […]

மேலும்....

இதய, சர்க்கரை நோய்களை தடுக்கும் கால்பந்தாட்டம்

வயதான காலத்தில் பொழுதுபோக்காக கால்பந்து விளையாடுவது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே இதய _ ரத்தநாள நோய்கள், சர்க்கரை நோய் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை கணிசமாக குறைப்பதாக அண்மையில் டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். 63_75 வயது முதியவர்களிடம் ஓராண்டுக்கும் மேலாக ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர் கோபன்-ஹெகன் பல்கலைக்கழகத்தின் உணவூட்டம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள். ஓராண்டு வாரம் இருமுறையாவது சேர்ந்து விளையாடுகிறார்கள். பயிற்சி முடித்த 4 மாதங்களிலேயே, அவர்களின் இதய ரத்தநாள […]

மேலும்....