செய்யக் கூடாதவை

கூர்மையான பொருளைக் குழந்தையிடம் கொடுக்கக் கூடாது கூர்மையான எந்தப் பொருளையும் குழந்தையிடம் விளையாடக் கொடுக்கக் கூடாது. அதேபோல் வாயினுள் எளிதில் செல்லும் பொருட்களையும் கொடுக்கக் கூடாது. கூறிய பொருள்கள் கண்களில் குத்திவிடும். வாயினுள் செல்லும் பொருள்கள் தொண்டைக்குள் சென்று அடைத்து உயிருக்குக் கேடு தரும். சிறு பொருள்களைக் கொடுத்தால் காது அல்லது மூக்கிற்குள் போட்டுக் கொள்ளும். எனவே, கேடு தராத மென்மையான பொருள்களைக் குழந்தைகளிடம் கொடுக்க வேண்டும். இரசாயனப் பூச்சுகள் உள்ள பொருள்களை, பொம்மைகளை குழந்தைகளிடம் விளையாடக் […]

மேலும்....

ஜான் வில்சன் எழுதிய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா

 

தொன்மைக்கால இந்தியாவும் தற்கால இந்தியாவும் பரப்பளவிலும் அவற்றின் உற்பத்தியிலும் பெருத்த வேறுபாடுகளைப் பெற்றிருக்கின்றன. உலகின் பிற நாடுகளோடு அவை கொண்டிருக்கும் தொடர்புகளிலும் வேறுபாடு இருக்கின்றது. தற்கால இந்தியா, வடக்கில் இந்துகுஷ் _ இமயமலைத் தொடர்களையும் தெற்கில் ‘சிலோன்’ (இலங்கைத் தீவையும் முழுமையாக உள்ளடக்கியிருக்கிறது.

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

அக்கிரகார மயமக்கபட்ட அரசுபணீயாளர் தேர்வாணையம் கேள்வி : மகாமகத்தில் காட்டும் அக்கறையை, அரசு, கல்வித் துறையில் காட்டத் துணியாதது ஏன்?– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் பதில் : மகாமகம்தானே, பாவங்களையெல்லாம் கழுவும், அரசு கல்வித் துறையாலா அது முடியும். கேள்வி : சமூகநீதித் தலைவர் தந்தை பெரியார் மண்ணில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் தற்கொலை, கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறதே?– எஸ்.கே.அகமது, தக்கலை பதில் : தற்போதுள்ள கல்வி முறையும், நடத்தைகளும் […]

மேலும்....

செய்ய்க்கூடாதவை

குழப்பத்தில், கோபத்தில், அவசரத்தில் முடிவெடுக்கக்கூடாது: நாம் ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. மன உளைச்சலில் முடிவெடுக்கக் கூடாது. உணர்ச்சி வசப்பட்டுச் செயல்படக்கூடாது. இது போன்ற மனநிலையில் எதையும் செய்யாது தனிமையில் அமைதியாய் இருந்து, முடிந்தால் தூங்கி எழுந்து, தெளிந்த மனநிலையில் முடிவுகள் மேற்கொண்டால், பல இழப்புகள், கேடுகள், தப்புகள், பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.  பதற்றமான மனநிலை, உணர்ச்சிவயப்பட்ட நிலை, கோபம் கோலோச்சும் நிலை, தூக்கக் கலக்கம், குழப்ப நிலை, உடல் நிலை சரியில்லாத நிலைகளில் முடிவெடுக்காமல் தள்ளிப் […]

மேலும்....

இறுதிச்சுற்று

வன்முறை, விரசம், தனிமனித துதிபாடல் என்று வரிசையாய் தமிழில் திரைப்படங்கள் வரும் நிலையில், உடல்திறப் போட்டியை அடிப்படையாய் வைத்து ஒரு திரைப்படம் உன்னதமாக உருவாக்கப்பட்டுள்ளது உண்மையில் மனதிற்கு நிறைவும் மகிழ்வும் அளிக்கிறது.

இயக்குநர் சுதா கொங்கரா சில ஆண்டுகள் உழைத்து இதைச் சாதித்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது. பூவையர், பைங்கொடி என்று போற்றிப் பொத்தி பெண்களைப் போகப் பொருளாக வைத்திருந்த ஒரு சமுதாயத்தில் பெண் உடல்திறப் போட்டியில் சாதிக்கக் கூடியவள் _ அதுவும் குத்துச் சண்டைப் போட்டியில் என்பதை உறுதி செய்வதன் மூலம் பெண்ணினம் சமையலுக்குரிய மெல்லினம் அல்ல அது வலுக்காட்டி சாதிக்கும் வல்லினம்தான் என்பதையும் இப்படம் சொல்லாமல் சொல்கிறது.

மேலும்....