வேர்க்கடலை

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஏற்றது. விட்டமின் ஏ மற்றும் பி3 அதிகம் உள்ளது. பச்சையாக அதிகம் சாப்பிடக் கூடாது. அவித்தோ, வறுத்தோ சாப்பிட வேண்டும். தோலுடன் சாப்பிட வேண்டும். தோலில்தான் சத்துக்கள் அதிகம். ஒரு நாளைக்க 50 கிராம் வேர்க்கடலை சாப்பிடலாம். கசப்பு சுவையுள்ள வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைத் தவிர்க்கும். ஆண்டி ஆக்சிடேன்கள் இருப்பதால் கழிவுகளை வெளியேற்றும்.

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

இந்நூல் திராவிட இயக்கத்தின் பழைய அரிய செய்திகளை அறிய ஓர் அற்புதமான களஞ்சியம் என்பதை இங்கே எடுத்துக்காட்டும்  சில பக்கங்களின் மூலமே அறியலாம். மிண்டோ_மார்லி சீர்திருத்தம் வருவதற்கு முன்னர் சென்னை கவர்னர் கவுன்சிலுக்கு மாவட்ட போர்டுகள் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் உரிமை பெற்றிருந்தன என்பதும், வடக்கு மாவட்ட போர்டுகள் ஒன்று சேர்ந்து ஒரு பிரதிநிதியையும், தெற்கு மாவட்ட போர்டுகள் ஒன்றுசேர்ந்து ஒரு பிரதிநிதியையும் அனுப்பி வைத்தன என்பதும் உங்களுக்குத் தெரிந்த செய்திதான். வடக்கு மாவட்ட போர்டுகளின் […]

மேலும்....

வாழ்வில் இணைய..

தோழியர் தேவை வயது 33, B.Pharm படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.75,000/-_ பெறக்கூடிய தோழருக்கு   பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயத 32, B.Tech படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 37, Ph,D., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.60,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்பு […]

மேலும்....

செய்யக் கூடாதவை

வெடி, வாணத்தால் மாசுபடுத்தக் கூடாது பொது இடங்களில், சாலைகளில், போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் வெடி வெடித்தல், வாணம் விடுதல், பாறையொலித்தல் போன்றவை செய்யக் கூடாது. காற்று மாசடைவதுடன், உலகம் வெப்பமா-தாலுக்கும், காது பாதிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்புண்டு. இதனாலும் வயதானவர்களும், நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தீபாவளி சமயத்தில் நாடு முழுக்க வெடித்துக்  கேடு செய்வதும், போகிப் பண்டிகை அன்று கண்டதையும் கொளுத்திப் புகை மண்டல-மாக்குவதும் சமூகத்திற்குச் செய்யும் தீங்காகும். மலிவு என்பதால் நல்லவற்றை ஒதுக்கக் கூடாது கம்பு […]

மேலும்....

நீர்வளமும் மேலாண்மையும்

மு.நாகேந்திர பிரபு பூமிப்பரப்பு 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் கடல்நீரின் அளவு 97 சதவீதமும் மற்றும் நன்னீரின் அளவு 3 சதவீதமாகும். சூழ்ந்துள்ள கடல்நீரின் மொத்த பரப்பு 1,49,400,000 சதுர கிலோ மீட்டர்கள். இதில் பசுபிக் மகா சமுத்திரம் 35.25 சதவீதத்தையும், அட்லாண்டிக் மகா சமுத்திரம் 20.09 சதவீதத்தையும், இந்து மகா சமுத்திரம் 14.65 சதவீதத்தையும் ஆக்ரமித்துள்ளன. கடல்கள் 1.3 ஙீ 1018 டன் அளவுள்ள நீரைத் தன்வசம் கொண்டதாக இருக்கிறது. சூழலில் உள்ள நன்னீர் […]

மேலும்....