மோடி ஆட்சியால் மாற்றமா? ஏமாற்றமா?

மனிதவளக் குறியீட்டில் உலகில் 105 ஆம் இடத்தில் இந்தியா! பிரதமர் மோடி அவர்களது தலைமையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் நடைபெறும் பா.ஜ.க.வின் (என்.டி.ஏ.) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஏற்கெனவே அளித்த பல வாக்குறுதிகள் இன்னமும் கானல் நீராகவே காட்சியளிக்கின்றன. 1. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏராளம் உருவாகி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்துவிட்டோம்; அல்லது  பெரும் அளவுக்கு வேலை கிட்டாதவர்கள் பட்டியலைக் குறைத்து விட்டோம் என்று சொல்லிப் பெருமைப்படும் நிலை வந்துள்ளதா? 2. “கருப்புப் பணத்தை வெளியே […]

மேலும்....

போர் விமானிகளாகவும் முதன்முதலில் பெண்கள் பணியேற்று சாதனை!

அவனி சதுர்வேதி, மோகனா சிங், பாவனா காந்த். இந்திய விமானப் படையில், வீர தீர சாகசம் செய்ய தகுதி பெற்றிருக்கும் முதல் பெண் போர் விமானிகள். இந்திய விமானப் படை சரித்திரத்தில் இடம் பெறப் போகும் வீராங்கனைகள்.

“அய்தராபாத்தில் இந்திய விமானப் படையின் பயிற்சி. அதுவும் கடுமையான பயிற்சிக்குப் பிறகு தேர்வாகியிருக்கின்றனர் மூவரும். வட இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மேலும்....

செய்ய முடியாத காரியங்களைச் செய்து முடித்தவர் பனகால் அரசர்!

தந்தை பெரியார்

தேடற்கரிய, ஒப்பு உயர்வு அற்ற நமதருமைத் தலைவர் கனம். பனகால் ராஜா சர். ராமராய் நிங்கவாரு திடீரென்று நம்மை விட்டு சனிக்கிழமை இரவு 1 மணிக்கு பிரிந்துவிட்டார் என்கின்ற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும், சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் அளவே இருக்காது. ஒரு நல்ல நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைவரின் காலம் முடிவு பெற்றதால், பெரியதும் திறமையானது மான ஒரு யுத்தம் முளைத்து வெற்றி குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில்,

மேலும்....

கருநாடகாவில் பகுத்தறிவாளர் கல்புர்கி பெயரில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம்

கருநாடக சட்டப்பேரவையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் திருத்தப்பட்ட நிலையில் மீண்டும் கொண்டு வந்துள்ளது. மேலும், அச்சட்டத்துக்கு பகுத்தறிவாளர் கல்புர்கியின் பெயரை சூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருநாடகா மூடநம்பிக்கை தடுப்புச்சட்டம் 2016 என்று கருநாடக மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் 8.7.2016 அன்று முன்வைக்கப்பட உள்ளதாக  கருநாடக மாநிலத்தின் சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மேலும்....

பந்தயக் குதிரையும் சாதா குதிரையும் ஒன்றாகுமா?

அய்யாவின் அடிச்சுவட்டில் 158 கி,வீரமணி

பிற்படுத்தப்பட்டோர் தலைமை இந்திய அரசியலை கைப்பற்றப் போகும், “பிரதமர் சரண்சிங் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை ‘விடுதலை’ இதழின் வாயிலாக தெரிவித்துக்கொண்டோம்.

“திரு. சரண்சிங் அவர்கள் பிரதமராவதன் மூலம் பெரியார் நூற்றாண்டில் சரித்திரத்தில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது.

மேலும்....