பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு அளிக்காதது ஏன்?

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!
பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு அளிக்காதது ஏன்?
சமூகநீதி சக்திகள் ஒருங்கிணைந்து போராடுவோம்!

மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு பி.பி.மண்டல் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. இதற்காக பத்து ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இந்தியா முழுவதும் (டில்லி உள்பட) 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தியது. வேறு சில அமைப்புகளும் அவ்வப்போது நமக்கு ஒத்துழைப்பை நல்கி வந்தன.

மேலும்....

’சரஸ்வதி’ படையெடுப்பு எப்படி? எப்போது?

– கி.வீரமணி


கல்விக் கடவுளாக சரஸ்வதி கற்பிக்கப்பட்டுள்ளதற்கும், திராவிடர்களுக்கும் எவ்வித ஒட்டோ, உறவோ கிடையாது. இது ஒரு வகை ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் கூறு, விளைவு ஆகும்.
நாம் நமது விழைவாகவோ, கற்பனையாகவோ இப்படி எழுதவில்லை.

தந்தை பெரியார் அவர்கள் நம்முடையதா, பிறரது பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவால் ஏற்பட்ட தாக்கமா? என்று கண்டறிய, ஒரு எளிய வழி, அச்சொல் அடி எங்கே உள்ளது? அது தமிழா?

மேலும்....

சிங்கத்தின் குகை திராவிடர் கழகம் – சீண்டிப் பார்த்த கண்ணதாசனுக்குப் பதிலடி!

அய்யாவின் அடிச்சுவட்டில்… 146
– கி.வீரமணி

சிங்கத்தின் குகை திராவிடர் கழகம் – சீண்டிப் பார்த்த

கண்ணதாசனுக்குப் பதிலடி!

தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாக்கள் தமிழகம் எங்கும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இன எதிரிகளின் கைக்கூலியாகச் செயல்பட்ட அன்றைய ஆஸ்தான கவிஞர் கண்ணதாசன், தந்தை பெரியாரின் குடும்பத்திற்குக் களங்கம் கற்பிக்கும் வகையில்,  அரசின் ஆதரவோடு ஓர் அற்பத்தனமான கருத்தை 05.03.1979 அன்று வெளிவந்த “தென்னகம்’’ என்ற அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேட்டில் எழுதினார். ஆளும் கட்சி அதிகாரபூர்வ அதே ஏட்டில் முன்பு, இப்படிப்பட்ட ஒரு இழிவான செய்தி வந்ததற்காக வருத்தம் தெரிவித்த அதே ஏடுதான் மகிழ்ச்சியோடு, இந்தக் “கட்டுரையையும்’’ வெளியிட்டிருந்தது என்பதிலிருந்தே, வருத்தம் தெரிவித்தவர்களின் உள்ளம் எப்படிப்பட்டது என்பது உலகுக்குத் தெரிந்துவிட்டது.

மேலும்....

திராவிடர்க்கு உரிய ஒரேதிருநாள்!

– தந்தை பெரியார்


திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது.

இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக _ தமிழ்நாட்டின், தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள்.

மேலும்....

விஜயவாடாவில் 9ஆம் உலக நாத்திகர் மாநாடு

விஜயவாடாவில் 9ஆம் உலக நாத்திகர் மாநாடு

2018 திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் உலக நாத்திகர் மாநாட்டை நடத்தும்

உலக நாத்திகர் 9 வது மாநாட்டினை விஜயவாடாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்கள். பின்னர் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை, வெளி-நாட்டுப் பேராளர்களை திராவிடர் கழகத்தின் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செய்து பாராட்டினார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் தலைவர் திருமதி மைத்ரி, மாநாட்டுத் தலைவர் முனைவர் வோல்கர் முல்லர் (ஜெர்மனி), பேராளர்கள் நார்வே நாட்டு மனிதநேய அமைப்புத் தலைவர் ராபர்ட் ரஸ்டட், ஜெர்மன் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆல்பிரட் ஹரால்ட் பெட்ஜோல்டு, டெக்சாஸ் அமெரிக்க நாத்திகர் அமைப்பினைச் சார்ந்த அரோன்ரா மற்றும் மராட்டிய மாநில பகுத்தறிவாளர் அமைப்பினைச் சார்ந்த அவினாஷ் பாட்டீல் ஆகியோரையும்  பாராட்டினார்.

மேலும்....