திரைப்பார்வை : ஜோக்கர்

தமிழ் திரைஉலகின் தன்னிகரில்லா சாதனை!எளிய – வலிய – யதார்த்த படைப்பு! இந்திய திரைத்துறையின் எதிர்கால திசைகாட்டியாய் இயக்குநர் ராஜூ முருகனை எல்லோர் இதயத்திலும் இடம்பெறச் செய்து விட்டதோடு, இயக்குநர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சியையும் இப்படம் ஏற்படுத்தி-யுள்ளது. கழிப்பறை கட்டாயம் வேண்டும் என்ற கருத்துக் களத்தில் மலர்ந்து மணக்கும் புரட்சிப் பூக்கள் இதில் ஏராளம்! கிராமத்து வெகுளி இளைஞன் சோமசுந்தரத்தின் காதலி ரம்யா பாண்டியன். வலிய வலிய நெருங்கி நெருங்கி இவன் தன் காதலை வெளிப்படுத்த, அவளோ விருப்பம் […]

மேலும்....

அண்ணாவை பார்க்க அய்யாவின் தவிப்பு!

  அண்ணா அவர்கள் அமெரிக்கா சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலையில் விமானத்தில் புறப்படும் முன் அய்யா அண்ணாவை சந்தித்தார். விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்று அண்ணா – அய்யாவை அப்போது கேட்டுக் கொண்டார். அன்று உணவு முடித்துச் சிறிது படுக்கையில் ஓய்வு எடுக்கும் பழக்கம் பொதுவாக இல்லை அய்யாவுக்கு-என்றாலும் கூட, மனச் சோர்வுடன் காணப்பட்ட அய்யா அவர்கள் ஏதோ ஒன்றை இழந்தவர் போல மிகுந்த கவலையுடன் கட்டிலில் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டவராக அமர்ந்திருந்தார்கள். விடுதலை அலுவலகத்தில் […]

மேலும்....

புதிய கோள்கள் கண்டுபிடிப்பும் மூடநம்பிக்கைகள் முறியடிப்பும்!

– மஞ்சை வசந்தன்

நாட்டில் புரையோடிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளில் சோதிட நம்பிக்கை முதன்மையானது. வானில் உள்ள கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்வைத் தீர்மானிக்-கின்றன என்பதே சோதிடத்தின் அடிப்படைத் தத்துவம். “இதுவொன்றும் மூடநம்பிக்கை-யில்லை; அறிவியல் அடிப்படையில்தான் கணிக்கப்படுகிறது’’ என்று இதற்கு வக்காலத்தும், சப்பைக்கட்டும் தொடர்ந்து செய்யப்படுகின்றன. எப்படி இது அறிவியல் சார்ந்தது என்று அவர்களால் விளக்க இயலவில்லை; ஆனால், அறிவியல் சார்ந்தது என்று மட்டும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

மேலும்....

யாரும் சாதிக்காததை சாதித்தவர் அண்ணா!

– தந்தை பெரியார்

வேறு எவரையும்விட அண்ணா அவர்களுக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதில், அவரைப் பாராட்டுவதில் ரொம்ப பொருள் உண்டு.

இந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்கு சாதிக்கவே இல்லை. என்னைப் பொருத்தவரை நான் காரியம் அதிகம் சாதித்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதன் பலன் அந்த அளவுக்கு ஏற்படவில்லையே! இனிமேல் தான் ஏற்பட வேண்டும். ஏற்படும் என்று ஆசைப்படுகிறேன்.

மேலும்....

எத்தனைக் காலம்தான் ஏழைகளை ஏமாற்றுவார்கள்?

உலகில் இந்தியாவுக்கு செல்வக் குவிப்பில் 7ஆவது இடமாம்! என்னே பெருமை! என்னே பெருமை! பி.டி.அய் செய்தி நிறுவனம் தந்துள்ள ஒரு செய்தி இதோ:_ உலக அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட செல்வந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 5,60,000 கோடி டாலர்களாகும். அதிக செல்வந்தர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. `நியூ வேர்ல்டு வெல்த்’ என்கிற அமைப்பின் அறிக்கையில் இது […]

மேலும்....