இராமனை வைத்து பிழைப்போர் களவானிப் பசங்களே!

பெருந்தலைவர் கு.காமராஜ் மேனாள் தமிழ்நாடு முதலைச்சர் “நீங்க பல தெய்வ வழிபாட்டை வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?’’ என்று முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டபோது, அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல், “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்-சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற போல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுளுங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, […]

மேலும்....

குலக் கல்வி திட்டத்தை ஒழித்துக் கட்டுவோம்! இன்றேல் செத்தொழிவோம்!

தந்தை பெரியார் இந்த நாட்டு மக்களாகிய நாம் சூத்திரர்கள் இழிஜாதி மக்களாக இருந்து வருகிறோம். இந்த இழிவுகள் இன்று நேற்றல்ல, 2000, 3000 ஆண்டுகளாக இருக்கின்றன, இவைகளை அதாவது இழிஜாதி மக்களாக, சூத்திரர்களாக, நாம் இருக்கிறோம் என்பதை நீங்கள் உணரவேண்டும், ஏதோ நம்மவர்களில் சிலபேர் பூணூல் போட்டுக் கொள்வதாலோ, நாமம் போட்டுக் கொள்வதாலோ, கோவில் கட்டுவதாலோ, உயர்ந்தவர்கள், பெரிய ஜாதி என்று கருதிக்கொள்ளாதீர்கள். இவைகளை  எல்லாம் செய்வதால்தான் சின்ன ஜாதி என்பதை  நாமாக ஒப்புக் கொள்வதாகும். நான்  […]

மேலும்....

சாலையோரப் பெண்ணாலும் சாதிக்க முடியும்!

  ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்-கோவில் நடைபெறும் வீடற்றவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சங்கீதா தகுதி பெற்றுள்ளார். சென்னை எழும்பூர் வால்டேக்ஸ் சாலையில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சங்கீதா. இவர் சிறுவயது முதலே கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எப்போதும் தனது நண்பர்-களுடன் ஏதாவது ஒரு மய்தானத்தில் விளையாடிக் கொண்டிருப்பார். தனது குடிகாரத் தந்தையால் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டவர். இவரது தாய்க்கு சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை […]

மேலும்....

ஈரம் காய்வதற்குள் ஏன் இந்த முயற்சி!

அ.இ.அ.தி.மு.க.வை அபகரிக்க  துடிக்கும்  ஆரிய  நரிகள்    எச்சரிக்கை!  எச்சரிக்கை! மஞ்சை வசந்தன் திராவிடர் கழகமும் தி.மு.கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்றார் அண்ணா. ஒரே இலக்கை இரு முறைகளில் அடையும் என்பதே அவர் அதன் வழி உணர்த்திய செய்தி. 1967இல் ஆரியத்தின் மூத்த நரியான இராசகோபாலாச்சாரியையே தன் அறிவுக் கூர்மையால் மயங்கவைத்து, ‘தன் அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை’ என்றதன் மூலம் தான் கூறியதை நடைமுறையிலும் உறுதி செய்தார். தி.க.விலிருந்து தி.மு.கழகம் பிரிந்தது முதல் எவ்வளவோ முரண்பாடுகள், எதிர்ப்புகள், விமர்சனங்கள், […]

மேலும்....

ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வதே சிறந்தது!

      “கல்யாண மாலை” மோகன் பேட்டி “கல்யாண மாலை’’ மோகன் அவர்கள். கடந்த 16 ஆண்டுகளாக திருமண ஏற்பாட்டாளராக ஆயிரக்கணக்கான மணமக்களை அறிமுகம் செய்து திருமணங்கள் நடக்கத் துணை நிற்பவர்.   அவர் தங்கள் குடும்பத்தின் சொந்த அனுபவங் களைக் காட்டி கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார். “திருமணத்தின்போது ஜாதகம் பார்க்காமல் செய்வதே சிறந்தது. பார்க்கும்போது வீணான அச்சங்கள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் நல்ல இணையர்கள் சேரமுடியாமல்  ஜாதகம் தடையாகிவிடுகிறது. எனது பெற்றோருக்கு 90 வயதுக்கு […]

மேலும்....