முந்திரிக்காட்டில் முகிழ்த்தெழுந்த அய்.ஏ.எஸ். அதிகாரி

 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள முத்தாண்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. மூன்றாம் வகுப்பு வரை கிராமத்தில் படித்தவர் 8 கி.மீ தொலைவிலுள்ள நெய்வேலியின் செயிண்ட்பால் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ வரை பயின்றார். கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். விரும்பிப் படித்தார். பெற்றோரின் ஊக்கத்தால் யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தார். விரும்பிய ஐ.ஏ.எஸ். கிடைக்கும்வரை தொடர்ந்து ஐந்து முறை யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை எதிர்கொண்டார்.

மேலும்....

கொசுவை விரட்டும் டி.வி.!

        கொசுவை விரட்ட இலைதழைகளைக் கொளுத்துவது போன்ற நம் முன்னோர்கள் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டு, கொசுவை விரட்ட ஏகப்பட்ட கொசு விரட்டிகள் வந்தாலும், அவற்றில் பக்க விளைவுகள் உண்டு. அதிலும், புகையும் கொசுவிரட்டிகள், புகை வராத திரவ கொசு விரட்டிகள் என நிறைய வகைகள். இப்போது தொலைக்காட்சிப் பெட்டிகளில் கொசுவை விரட்டும் ஏற்பாட்டைச் செய்திருக்கிறது எல்.ஜி.நிறுவனம். அது தயாரித்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து அல்ட்ரா சோனிக் ஒலி அலைகள் வருகின்றன. இந்த அலைகள் மனிதர்களின் […]

மேலும்....

இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் பிரண்டை!

      பிரண்டை இந்தியா, இலங்கை, வங்க தேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடி இனத் தாவரமாகும். ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பலவகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது ஒரு காயகல்பம். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. தமிழில் பிரண்டை எனச் சொல்லப்படும் இந்த மூலிகையை ஆங்கிலத்தில் போன்-செட்டர் (Bone Setter) என்கிறார்கள். சிலர் உடல்மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு […]

மேலும்....

தந்தை பெரியாரின் 138 ஆவது பிறந்தநாள் தலைவர்கள் சிறப்புரை

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையில்,

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில் எவ்வளவோ எதிர்ப்புக்கிடையில் நேரப் போக்குப் பிரச்சாரமாக நடந்து வந்திருந்த போதிலும் அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களில் இருந்தது ஏன்? சுயமரியாதை இயக்கம் தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு ஆகியவைகளை சமுதாய இயலில் ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது. மத இயலிலும் மகாபண்டிதர்கள், ஞானிகள், ஆச்சாரியார்கள் என்பவர்களையெல்லாம் மாறிக் கொள்ளச் செய்திருக்கிறது; தோழர் காந்தியாரை பல கரணங்கள் போடச் செய்துவிட்டது.

மேலும்....

வாசகர் கடிதம்

      உண்மைக்கு நிகர் உண்மையே! அக்டோபர் 16_31, 2016 நாளிட்ட உண்மை மாத இதழைப் படித்துப் பரவசமடைந்தேன். இதழில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் பாதுகாத்துப் போற்றப்பட வேண்டிய வரலாற்று ஆவணங்கள் ஆகும். 1. ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்-காட்டியபடி மதச்சார்பற்ற இந்தியாவில்தான் மத விடுமுறைகள் அதிகம் என்ற புள்ளி விவரம் அரசுகளைச் சிந்திக்க செய்யும். 2. தமிழர் தலைவர் அவர்களின்  நூற்றாண்டு காணும் வள்ளல் எம்.ஜி.ஆர்! என்ற கட்டுரை சிறப்பாகவும், சீரிய வரலாற்றுக் குறிப்புகளை […]

மேலும்....