கொடியின் இலட்சியம்! – அன்னை மணியம்மையார்

 

திராவிட நாடும், திராவிட சமுதாயமும் இந்திய நாடு, இந்திய சமுதாயம் என்பது போன்ற ஒரு கற்பனை நாடும், கற்பனைச் சமுதாயமும் அல்ல; கற்பனைச் சொற்களும் அல்ல. வேத – புராண – இதிகாசங்களுக்கு முன்பிருந்தே திராவிட நாடும், திராவிட சமுதாயமும், திராவிடத் தனி ஆட்சியும் இருந்து வந்திருக்கிறது. வேதத்தில் மீனக் கொடியைப் பற்றியும், இராமாயண இதிகாசங்களிலும் மீனக் கொடியைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.

மேலும்....

திதி – யார் வயிற்றில் அறுத்துக் கொட்ட?

கேள்வி : திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறார்களே அது எதற்காக? போகிறவர்கள் என்றைக்கோ போய்ச் சேர்ந்தாகி விட்டது. அவர்களுக்கு வருடா வருடம் இந்த மாதிரி ஒரு சடங்கு தேவையா? இங்கே கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம் போன்றவை அங்கே அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அவர்கள் இருக்கிற இடம்தான் உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் சொல்கிற மந்திரத்தின் மூலமாக, அவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நன்மை விளையப் போகிறது? இந்தச் சடங்கு எதற்காக? பகுத்தறிவுக்கு இது சற்றும் ஒவ்வாதது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

மேலும்....

பெண் சமுதாயம் முன்னேறாவிடில் நாடு முன்னேற முடியாது!

நான் பகுத்தறிவுவாதி, சமுதாயத் தொண்டு செய்பவன் என்பதால், உண்மையென்று எனக்குத் தோன்றிய கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு மனித சமுதாய முன்னேற்றத்தைக் கருதித் தொண்டாற்றி வருகின்றேன். மனித சமுதாய முன்னேற்றத்திற்கு -வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகின்றேன். அதில் ஒன்றுதான் இத்திருமண முறை மாற்றமுமாகும். முதலில் கலப்புத் திருமணம் என்று பேசியவர்கள், இது கலப்புத் திருமணம் அல்ல, கலப்புத் திருமணம் என்பது தவறு என்று குறிப்பிட்டார்கள்.

மேலும்....

நம் இதய மலர்வளையம்!

 

நம் அறிவு ஆசான் அய்யா அவர்களை 95 ஆண்டு வரை வாழ வைத்து, அதற்குப் பிறகு அய்ந்து ஆண்டுக் காலம், அவர்கள் விட்டுச் சென்ற பணியை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவிதச் சபலத்திற்கும் ஆளாகாமல் செய்து முடித்து, வரலாற்றில் இப்படிப்பட்ட புரட்சித் தாயை இந்த நாடு கண்டதில்லை என்று அறிவாளிகளும், ஆய்வாளர்களும் வியக்கும்வண்ணம் வாழ்ந்தவர் நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் ஆவார்கள்.

மேலும்....

அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மார்ச் 10

அன்னையார் பற்றி அய்யா!….

மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு _ தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ, என் தொண்டுக்குத் தடையாயில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.

– “விடுதலை’’ (15.10.1962)

மேலும்....