பெண்கள் விடுதலைக்கு பெண்களே முன்வருக!

– அன்னை மணியம்மையார்

கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரகப் பொன் விழாவில்,
26-_4_-1975 அன்று பெண்கள் மாநாட்டைத் திறந்து வைத்து அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…

எங்கள் இயக்கத்தின் (திராவிடர் கழகத்தின்) முக்கிய கொள்கைகள் இரண்டு. ஒன்று சாதி முறை அடியோடு ஒழிக்கப்பட்டு மக்கள் எல்லாம் சமத்துவம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பது. மற்றொன்று, பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு ஆண்களைப் போலவே சகல உரிமைகளையும் ஆணுக்குச் சமமாக அடைய வேண்டும் என்பது.

மேலும்....

கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். மயமாக்குவதை மாணவர் அமைப்புகள் ஒன்றிணைத்து தடுக்க வேண்டும்!

கல்வியைக் காவிமயமாக்கிடும் ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பா.ஜ.க. தலைமையிலான மத்திய (மோடி) அரசின் கல்வித்துறை -_ மாணவர்களையும், இளைஞர்-களையும் தங்கள் இலக்குகளாக்கி, பல்கலைக் கழகங்கள், அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் அதன் மாணவர் பிரிவாகிய  ABVP  என்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் வலைக்குள் மாணவர்கள், சில ஆர்.எஸ்.எஸ். ஆசிரியர்களின் துணையோடும் ஆர்.எஸ்.எஸ். மயமாக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஏராளமான பணபலம், பத்திரிகை, ஊடக பலம், ஆட்சி அதிகார பலம், […]

மேலும்....

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவுகள் தனிப்பட்ட சுகதுக்கத்தை பொறுத்தது; தன்னலம் மறையும்போது அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது; தமிழர்களின் நிலையைப் பொறுத்தது. எனவே, தமிழர்களை காணுந்தோறும் நினைக்குந் தோறும் பன்னீர்செல்வம் ஞாபகத்துக்கு வருகிறார். -தந்தை பெருயார்(சர். ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவு நாள்: மார்ச்-1)

மேலும்....

கயிற்றை கடித்து காரை இழுக்கும் எட்டாம் வகுப்புப் பெண்!

“நான்கு வயதிலே தெருவுல பசங்க விளையாடும் கிரிக்கெட்ல அஞ்சு நிமிஷம், கொஞ்சம் தள்ளி நொண்டி விளையாடும் பெண்களோட அஞ்சு நிமிஷம்னு எந்த விளையாட்டா இருந்தாலும் உள்ளே புகுந்து ஒரு கை பார்த்திடுவேன். அந்தப்  பழக்கம்தான் இப்போ சாதனை புரிய வைத்திருக்கிறது’’ என்கிறார் அபிநயா. மதுரை, ஸ்ரீ அரபிந்தோ மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் அபிநயா, கேரம் போட்டிகளில் தேசிய அளவில் தொடர் சாதனை படைத்து வருகிறார்.

மேலும்....