அண்ணா!

“யானறிந்த வரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்கக் கொண்டாட்டத்தில் 4இல், 8இல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது. இந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் “மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்துவிட்டார். எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

சிவகங்கை சுயமரியாதை வீரரான ராமச்சந்திரனாரை காங்கிரசில் சேருமாறு, சத்தியமூர்த்தி (அய்யர்) வலியுறுத்தியபோது, நீங்கள் பூணூலை அகற்றினால் காங்கிரசில் சேருகிறேன் என்று முகத்திலடித்தாற்போல் அவர் பதில் தந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

பெரியார் விருதுக்கு இணையானது எதுவும் இல்லை! திராவிடர் திருநாள் விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி உரை

17.1.2016 அன்று சென்னை பெரியார் திடலில்  தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி அவர்கள் ஆற்றிய உரையில்,

“எல்லா விருதுகளையும் யார் யாரோ கொடுத்தார்கள்; இந்த விருதைத்தான் ஆசிரியர் கொடுத்திருக்கிறார். ஒரு நல்ல மாணவனுக்கு ஆசிரியர் கொடுக்கிற விருதுதான் உயர்ந்த விருது, உயரிய விருதாகும். எனவே, இந்த விருதை நான் பெருமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.

மேலும்....

ஜாதி, மதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை! நடிகை பார்வதி பேட்டி

பார்வதி மேனன் என்பதில் மேனன் என்ற பெயரை  பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டீர்களே ஏன்? என்று நடிகை பார்வதியிடம் கேட்டதற்கு,

ஆமாம்… அவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மதம், என் ஜாதி என பிரபலப்படுத்தி ஒன்றும் ஆகப் போவது இல்லை. ஜாதியின் பெயரை சொல்லித்தான் என்னை அடையாளப்படுத்த வேண்டி இருந்தால், அப்படியோர் அடையாளம் எனக்குத் தேவையில்லை.

மேலும்....

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து!

-சிகரம்

பெரியார் என்றால் மனிதநேயம் என்று பொருள் என்று எவரும் சொல்வர். காரணம், அவர் உலகம் தழுவி மனித நலத்தை விரும்பியவர். யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற தமிழரின் உயர் சிந்தனையின் செயல் வடிவம்.

தன் கொள்கையின் ஒட்டுமொத்த சாரமாக, சுயமரியாதை என்ற தத்துவ உணர்வை தன் இயக்கத்தின் அடையாளமாகக் காட்டினார். சுயமரியாதை உணர்வே புரட்சிக்கு அடிப்படை; புரட்சியே சமத்துவத்தின் வழித்தடம்.

மேலும்....