கிரீமிலேயர் : சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிரானது!

அண்மையில் மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வான பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கையில், கிரீமிலேயர் என்ற காரணம் காட்டி, அவர்கள் வெற்றி பெற்றும் பதவி தராமலிருப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல; நியாய விரோதம்; சமூக அநீதியும் ஆகும்! அவர்கள் தேர்வு எழுது முன்னர், அக்காரணத்தைக் காட்டி, அவர்களது மனுக்களை நிராகரிக்காமல், அவர்களைத் தேர்வு எழுதவிட்டு, அவர்கள் வெற்றியும் பெற்றுள்ள நிலையில்- இப்படி கிரீமிலேயர் _- அதிக வருமானம் உள்ள பெற்றோர்களைக் கொண்டவர்கள் என்று காரணம் காட்டித் தடுப்பது […]

மேலும்....

கர்னல் இங்கர்சால்

“அறிவியக்க உலகத்தில் தலைமை-யிடம் பெற்றிருப்பவர்களில் கர்னல் இங்கர்சால் மிகச் சிறந்தவர். அவருடைய கட்டுரைகள் அறிவியக்க இலக்கியத்தில் சிறந்தனவாய் விளங்கு-கின்றன. இங்கர்சாலின் சொற்கள் உயிர்ப்பாற்றல் வாய்ந்தவை. கருத்துகள் உள்ளத்துக்கு உறுதி அளிக்கத்தக்கன. அறிவியக்கப் பிரியர்கள் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஆயிரக்-கணக்கான கருத்துகள் அவருடைய கட்டுரைகளிலே நிரம்பியிருக்கின்றன.’’ – தந்தை பெரியார்இங்கர்சால் பிறந்த நாள்: (11.08.1833)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

சுயமரியாதை வீரர் ராமச்சந்திரன் (சேர்வை) தாழ்த்தப்பட்டோர் நடத்திய கூட்டங்களுக்கு ஜாதி வெறியர்களின் எதிர்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு, கையில் துப்பாக்கியுடன் வந்து கலந்து கொண்டவர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

GATE – 2017 தேர்வு பற்றிய சில முதன்மைக் குறிப்புகள்

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (அய்அய்டி), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (அய்அய்எஸ்சி) உள்பட நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் பொறியியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கேட்(Graduate Aptitude Test in Engineering – GATE). சில கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வின் அடிப்படையில் பிஎச்டி படிப்புக்கும் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் அய்அய்எஸ்சி, ஏழு அய்அய்டிக்கள் இணைந்து இத்தேர்வை நடத்துகின்றன. வரும் ஆண்டு கேட் தேர்வை நடத்தும் பொறுப்பை ரூர்க்கி அய்அய்டி ஏற்றுக் கொண்டுள்ளது. கேட் தேர்வை எழுதி தகுதிபெறும் மாணவர்கள் முதுநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் வழங்கும் உதவித்தொகையைப் பெற முடியும்.

மேலும்....

பெண்ணால் முடியும் :

 

மடையாம்பட்டு கிராமத்திலிருந்து துருக்கிக்கு!

“சாதனைங்கிறது பெரிய விஷயம். ஆனா, முயற்சி செஞ்சா முடியாதது எதுவும் இல்ல’’ என்று ஹேமமாலினி சொல்லும்போது, நமக்கும் சில துளிகள் நம்பிக்கை தருகிறார். வேலூர் மாவட்டம், மடையாம்பட்டு கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான ஹேமமாலினி. ஒடுக்கத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, மாநில, தேசிய அளவிலான ஈட்டி எறிதல் சாம்பியன் என்ற அடையாளத்தை தனதாக்கிக்-கொள்ள, இந்தக் கிராமத்துச் சிறுமிக்குத் துணையாக, அவர் திறமையைத் தவிர வேறெதுவும் இல்லை.

மேலும்....