சுத்தமற்றதாம் ஆனால் புனிதமானதாம்!

“கங்கை நீர் மாசு அடைந்துள்ளது. எனவே, குடிப்பதற்கு உகந்ததல்ல’’ என்று கூறி அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் முன் சில அமைப்பினர் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அஞ்சல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புனித கங்கை நீர் விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், பிற அஞ்சல் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். கங்கோத்ரி, ரிஷிகேஷிலிருந்து கொண்டு வரும் கங்கை நீர் புனிதத்தன்மை பெற்றது. இருப்பினும், பாட்டில்களிலேயே தெளிவாக குடிப்பதற்கு உகந்ததல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிப்பதற்கான வழிமுறைகள் இதில் மேற்கொள்ள-வில்லை. […]

மேலும்....

குற்றாலத்தில் கொட்டிய கொள்கை அருவி! அயராது உழைக்கும் ஆசிரியரைப் போற்றுவோம்!

வாழ்நாளெல்லாம் தாழா உழைப்பில்வயிரமாய் அறுகிப் புகழின் உருவாய் விளங்கும்வைரமணியே தமிழர் தலைவர் வீரமணியாவார்! பெயருக்கேற்ற பொருளாய் விளங்குபவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.பகுத்தறிவுத் தந்தை பெரியாரவர்கள் தேர்ந்தெடுத்தளித்த பெரும் பொறுப்பே விடுதலை ஆசிரியர் பணி! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து தந்தை பெரியார் தந்த சிறந்த பொறுப்பு! சற்றும் பிறழாமல் சொந்த உழைப்பில் தோழமைத் துணையுடன் துடிப்போடு மேலும் மேலும் சிறப்புகள் சேர்த்து விடுதலை நாளிதழ் வெளிவரும் சிறப்பு, வெற்றிமுரசம் கொட்டி முழங்குகின்றது. பெரியார்தம் பேரன்புக்குரியவர் பண்பாளர், […]

மேலும்....

கொழுப்புப் பொருட்களுக்குக் கூடுதல் வரி!

கேரள அரசு வழிகாட்டுகிறது! மது விற்பனை செய்யும் பார்களுக்கு தடைபோட்ட கேரள அரசு, அடுத்த அதிரடி நடவடிக்கையாக, “பிட்சா’’, “பர்கர்’’ போன்ற கொழுப்பு உணவுப் பண்டங்களுக்கு 14.5% வரிவிதித்துள்ளது. பஞ்சாபுக்கு அடுத்து கேரளாவில் உடல்பருமன் அதிகமாகிவருவதால் இந்த நடவடிக்கை. இதுகுறித்து பல விமர்சனங்கள் வினாக்கள் எழுப்பப்பட்டாலும் கேரள அரசு தன் முடிவில் உறுதியாகவுள்ளது.

மேலும்....

ஆண்களுக்கான அற்புத கனி

ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பட்டியலில் நெல்லிக்கு மிக முக்கிய இடமுண்டு. தினமும் ஒரு வேளை நெல்லிச்சாறு பருகி வந்தால், அதிலுள்ள இரும்புச்சத்து ஆண்களின் தாது விருத்திக்கு உதவும். விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளோருக்கு இது நல்மருந்து. மது அருந்தும் பழக்கம் உள்ள ஆண்கள் தினமும் நெல்லி சாப்பிடுவது, கல்லீரலில் மது ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைக்கும். மது அருந்துவோர், மறுநாள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால், கல்லீரல் பாதிப்பு குறையும். மது மயக்கம் […]

மேலும்....

இணையதளம் மூலம் இயந்திரங்களை பழுதுநீக்க நவீனத் தொழில்நுட்பம் சர்வதேச கண்காட்சியில் மாணவர்கள் அசத்தல்

இணையதளம் வழியாக இயந்திரங்களில் முன்கூட்டியே பழுதைக் கண்டறிந்து சரி செய்யும் தொழில்நுட்பத்தை அய்.அய்.டி (இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம்) இயந்திரப் பிரிவு மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு சென்னையில் சர்வதேச பொறியியல் இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. அம்பத்தூர் தொழிற்பேட்டை உரிமை-யாளர்கள் சங்கம், தேசிய சிறுதொழில் கழகம், உலக வர்த்தக மய்யம் ஆகியவை இணைந்து, சென்னை வர்த்தக மய்யத்தில் சர்வதேச அளவிலான இயந்திரம், உதிரிபாகங்கள் கண்காட்சியை நடத்தி வருகின்றன. இதில் சர்வதேச அளவில் பல்வேறு […]

மேலும்....