தகுதி திறமை மோசடி

நமது நாட்டில், நாட்டின் உரிமையாளரான, பெருங்குடி மக்களாகிய நாம் இப்போது, அதாவது காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கமும், அவர்களுக்கு இருந்து வந்த நிபந்தனை அற்ற கூலி _- இழி மக்களான சில பார்ப்பனரல்லாத, பதவிக்கு எச்சில் பொறுக்கிகள் _- ஆதரவாளர்களின் ஆதிக்கமும், ஒரு அளவுக்கு ஒழிக்கப்பட்ட பின்பே சிறிது மான உணர்ச்சி பெற்று, ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததன் பயனாய் நாம் கல்வித் துறையில் வளர்ச்சி பெற்று வருகிறோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வளர்ச்சி எப்படி என்றால், கல்வித் துறையில் பார்ப்பான் ஆதிக்க காங்கிரஸ் காலத்தில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தம் நாம், மூன்றே கால் கோடி மக்களில் (16 இலட்சம்) பதினாரு இலட்சம் மக்களே படித்துக் கொண்டிருந்த நம் மக்கள்

மேலும்....

எது திராவிட இயக்கம்? ஆசிரியர் விளக்கம்

திராவிட இயக்கத்தை ஒழித்தே தீருவோம், திராவிட இயக்கத்தால் நாடு சீரழிந்து விட்டது என்று பொத்தாம் பொதுவில் கூறுவது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மிக அழகாகவே பதிலடி கொடுத்தார். திராவிட இயக்கம் என்றால் திராவிடர் கழகமும், திமுகவும் தான். திராவிட என்ற பெயரை வைத்துக் கொள்பவை எல்லாம் திராவிட இயக்கமாகாது என்று பளிச்சென்று விளக்கம் அளித்தார் தமிழர் தலைவர். எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; மொழியால் தமிழர். இனத்தால் திராவிடர்கள் – இதுதான் மொழியால், வழியால், விழியால் திராவிடர்கள் என்பதற்குப் பொருள். இந்தக் கொள்கையை உடைய திராவிட இயக்கம்தான் இந்த நாட்டைப் பக்குவப்படுத்தி வைத்துள்ளது.

மேலும்....

வருகின்ற ஆட்சி மீட்சிக்கான ஆட்சியாக வரவேண்டும்

வருகின்ற (மே) 16ஆம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலுக்காக இம்முறை பல்வேறு அணிகள் ஆறுக்கும் மேற்பட்ட அணிகள் போட்டியிடுகின்றன. என்றாலும்

உண்மையான போட்டி ஆளும் அ.தி.மு.க.வுக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும்தான்!

மக்களாட்சியின் முதல் அமைச்சர் ஒருவர் 5 ஆண்டுகால ஆட்சியில், மக்களை நேரில் சந்தித்தது என்பது ஒரு முறை, இரு முறை தவிர வேறில்லை என்பது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது.

மேலும்....

அய்யா, அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு அ.தி.மு.க. அரசு மோசடி செய்கிறது!

வருமான வரம்பாணைக் குறித்து சென்ற இதழில் வெளிவந்த 4.7.1979 அன்று வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சி:

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு கல்வி உத்தியோக வாய்ப்புகளுக்கு இடஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்ற அரசியல் சட்டத்தின் விதிக்கு மாற்று விதியாக குறிப்பிட்ட அளவு வருமானத்திற்குக் கீழ் உள்ளவர்களைத்தான் “தாழ்த்தப்பட்டவர்களாக’’ கருத முடியும். மற்றவர்கள் முன்னேறிய ஜாதியினராக கல்வி, உத்தியோகத்தில் போட்டியிட வேண்டும் என்று தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்தால் அது எப்படிஅரசியல் சட்ட விரோதமோ அது போன்றதுதானே, பிற்படுத்தப்பட்டோருக்குத் தற்போது, பிறப்பித்துள்ள ஆணையும்? தமிழக அரசு மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய பிரச்சினை இது; கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ந்துவரும் முன்னேற்ற வாழ்வில் கோடரியைப் பாய்ச்சும் ஆணை இது!

மேலும்....

நுழையாமல் தடுப்பதே நுழைவுத் தேர்வு!

1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது நுழைவுத் தேர்வு என்ற ஒடுக்கப்பட்ட மாணவர் நலத்திற்கு எதிரான ஒரு முறையை நடைமுறைப்படுத்தினார். 1979ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டில் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர். பல்வேறு எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் எதிர்கொண்டார். தேர்தலில் தோல்வியும் கண்டார். இறுதியில் தமிழர் தலைவர் அவர்கள் எடுத்துவைத்த பல்வேறு வாதங்கள், விளக்கங்களைக் கூர்மையாகச் செவிமெடுத்த எம்.ஜி.ஆர். தாம் சொல் பேச்சக்கேட்டு, மாபெரும் வரலாற்றுப் பிழை செய்துவிட்டதை உளப்பூர்வமாக உணர்ந்தார். அந்த உணர்ச்சி உந்தலின் விளைவாய் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையை நீக்கியதோடு, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50% உயர்த்தினார்.

மேலும்....