கருத்துச் சுதந்திரத்தைக் காப்பது நீதிமன்றங்களின் கடமை!

எதிரானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! “பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு விசாரணைத் தகவல்கள் கசிவது தொடர்பாக சி.பி.அய்.க்கு மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.’’ “கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் மகேஷ் சந்திர குரு. கடந்த 2015, ஜனவரி 3-ஆம் தேதி மைசூரு பல்கலைக்கழகத்தில் நடந்த பயிற்சிப் பட்டறையில் பேசும்போது, “ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான ராமன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். […]

மேலும்....

வேளாண்மையில் பூச்சிக் கொல்லியாகப் பயன்படும் சாராயம்!

தேவைகளின் உச்சமே கண்டுபிடிப்புகளின் தோற்றமாகும். இதை மெய்ப்பிக்கும் விதமாக மகாராஷ்ட்டிர மாநில விவசாயிகள் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை விரட்டுவதில், பயிர்களைக் காப்பதில் தாங்கள் சந்தித்துவரும் இடர்பாடுகளிலிருந்து விடுதலை பெற முயன்றதன் விளைவாக, சாராயத்தால் இத்தொல்லைக்கு விடிவு கிடைக்கும் என்பதைக் கண்டிருக்கின்றனர். இராசாயன உரங்களின் அபரிமிதமான உபயோகத்தால், நிலம் தன் நல்லியல்பு குன்றி, குறைந்த அளவே விளைச்சல் தரும் சூழலையும் மாற்றிடும் இயல்பு சாராயத்திற்கு உண்டு என்பதை அனுபவ வாயிலாக அறிந்து பயனடைந்து வருகின்றனர். நாட்டு சாராயம், கள்ளு, […]

மேலும்....

அதிக பிரதிகள் அச்சிடும் சிறிய ரக அச்சு இயந்திரம் : மாணவர்கள் சாதனை

  தெளிவான, அதிக பிரதிகள் அச்சிடும் ஆப்செட் அச்சு இயந்திரத்தை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.சென்னையையடுத்த நசரத்பேட்டையிலுள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் மணிக்கு 10 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளனர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.செந்தில்குமார், துணைப் பேராசிரியர் ராஜேஷ்குமார் மாணவர்கள் சதீஷ் (இயந்திரவியல் பொறியியல் மாணவர் இறுதி ஆண்டு), பி.வினோத்குமார் (இயந்திரவியல் பொறியியல் மாணவர் இறுதி ஆண்டு) ஆகியோர் இந்த இயந்திரத்தை […]

மேலும்....

செய்யக் கூடாதவை

தப்பை ஒப்பத் தயங்கக் கூடாது மனிதன் என்பவனே தவறி திருந்தி செம்மை அடைபவன்தான். எவ்வளவு உயர்ந்த, சிறந்த, நேர்மையானவர்களாயினும் தெரிந்தும், தெரியாமலும் தப்பு அல்லது தவறு செய்யக் கூடும். ஆனால், தான் செய்த தப்பை ஒப்புக் கொண்டு, சரியான பாதைக்கு வந்துவிட்டால் சிக்கல் அத்தோடு தீரும். மாறாக, தான் செய்தது தவறு என்று தெரிந்தும், அது சரிதான் என்று நிலைநாட்ட முற்படுவது கேவலத்தையும், இழிவையும் தரும். தப்பை ஒப்புக் கொள்வது பெருந்தன்மையையே காட்டும். மாறாக, அதனால் இழிவு […]

மேலும்....