இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார்

கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வதில், முதன்மையாயிருந்து வந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில், பொதுவாக எல்லா மக்களுக்கும் பயன்-படக்கூடிய காரியங்களைச் செய்ய வேண்டுமென்று துணிந்து, பெரும்பொருள் செலவோடு அவற்றைச் செய்து காட்டிய முதல் வழிகாட்டி இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களேயாகும். அவர் செய்த பல காரியங்களில், என்றைக்கும் எண்ணக் கூடிய வகையில் திராவிடர்களுக்கு நினைப்பூட்டி வருவது அண்ணாமலைப் பல்கலைக்கழகமாகும். –  தந்தை பெரியார்(நினைவு நாள்: ஜூன் 15, 1948)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

முதல் குழந்தையைக் கங்கை ஆற்றில் தூக்கி வீசி சாகடிக்கும் ‘கங்காப் பிரவாக் பாதனம்’ என்ற பார்ப்பனப் புரோகிதக் கொடுமையை 1835ஆம் ஆண்டு அரசாங்கம் உத்திரவு போட்டு நிறுத்தியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

அக்கிரகாரம் ஆனந்தக்கூத்தாடினால் நம்மக்களுக்கு அது கேடு என்று பொருள்!

தென் ஆர்காடு மாவட்டம் கல்லக்குறிச்சியில் ஜூலை மாதத்தில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் நூற்றாண்டு விழாவும், ஊர்வலமும் நிகழ்ச்சிகளும் கழக வரலாற்றில் தனி சிறப்பு வாய்ந்தவையாக திகழ்ந்தன. மாநாட்டில், கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி, மாவட்ட தி.க. தலைவர் பண்ருட்டி நா.நடேசன், மாவட்டச் செயலாளர் இரா.கனகசபாபதி, அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை உள்ளிட்ட கழக தோழர்களும், முன்னாள் அமைச்சர், இராசாங்கம், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ் மாநிலத் துணைச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டவர்களும் என்னுடன் கலந்து கொண்டனர். மாநாட்டின் இரண்டாம் நாளில், கல்லக்குறிச்சியில் எடைக்கு எடை ரூபாய் நாணயம் அளிக்கப்பட்டது. எடை தட்டில் நான் உட்காரவில்லை, அதற்கு பதிலாக தந்தை பெரியார் அவர்களின் உருவ படத்தை வைத்து, பணம் அளிக்கப்பட்டது.

மேலும்....

பெரியார் விரும்பிய பெண்கள்

தங்களைப் போல் பலரும் குத்துச்சண்டை விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும். தங்களைவிட மேலும் மேலும் போட்டிகளில் கலந்து, பதக்கங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இலவசமாக குத்துச்சண்டை கற்றுக் கொடுக்கிறார்கள் வடசென்னையைச் சேர்ந்த அய்ந்து பெண்கள்.

மேலும்....

மதிப்பெண்ணுக்காக மாணவர்களை வருத்தாதீர்!

ஆண்டுக்காண்டு தேர்வு எழுதியதற்கு மறுநாள், தேர்வு முடிவு வெளிவந்தபின், தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இதற்குக் காரணம் என்ன? மதிப்பெண்தான் வாழ்க்கை என்று பெற்றோர் உட்பட எல்லோரும் நினைப்பதும், அதை மாணவர் மனதில் பதியச் செய்வதும் ஆகும்.

மேலும்....