செய்யக் கூடாதவை

அடுத்தவருக்குத் தொற்றும்படி இருமுதல் தும்முதல் கூடாது இருமல் தும்மல் இயற்கையானது. தடுக்க முடியாது. ஆனால், இந்த இரண்டும் எதிரில் உள்ளவர்களுக்கு நோயைப் பரப்பும் என்பதால் அதனைத் தவிர்க்கும் வகையில் இவற்றை வெளிப்படுத்த வேண்டும். குனிந்து, துணியை வாயில் பொத்தித் தும்ம வேண்டும் அல்லது இரும வேண்டும். நடைப்பயிற்சிக்கு முன் டீ, காபி குடிக்கக் கூடாது நடைப்பயிற்சி தொடங்கும் முன் சிலர் காபி அல்லது டீ குடித்துவிட்டுச் செல்வர். இது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. நடைப்பயிற்சி முடிந்த பின் 10 […]

மேலும்....

கலைகளில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

– சு.அறிவுக்கரசு

கற்றுக்கொண்டு செய்யும் தொழில்கள் அத்தனையும் கலை என்பார்கள். தமிழ்நாட்டில் விளங்கிய தொழில்கள் அறுபத்து நான்கையும் ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று “சுக்ரநீதி’’ எனும் நூலில் எழுதிவைத்துக் கொண்டு, அவற்றைக் கற்பிக்க ஒரு கடவுள், அதுதான் சரஸ்வதி என்றும் ஏற்படுத்திவிட்டனர். மற்போரும் கலை, நெய்வதும் கலை, சிலை செய்வதும் கலை, ஓயியம் வரைவதும் கலை, செருப்பு தைத்தல், உடை வெளுத்தல், மயிர் மழித்துத் திருத்தல், பாடுதல், ஆடுதல் என அனைத்துமே கலைகள்தாம்! இதை அறியாது இசை, நடனம், இசைக் கருவிகளை இசைத்தல் போன்ற சிலவற்றை மட்டுமே கலைகள் எனக் கொண்டாடிவரும் அவலம் தற்போது!

மேலும்....

கோயில் நகரம் என்றால்…

திருமாலும் சிவனும் குருதிப்பலி எதுவும் கோரவில்லை. ஆனால், அவர்கள் பண்புக்கியைய அவர்கள் ஒரு கன்னிப்பலி கேட்கின்றனர். பல வழிகளில் _ சில மிகவும் நடுக்கந்தரும் முறைகளில் _ சிறு பெண்கள் தேடித் திரட்டப்பட்டு, இறைவனுக்குப் பணிவிடை செய்யும் தேவதாசிகள் ஆக்கப்படுகின்றனர். தென் இந்தியாவில், ஒரு நகர் எந்த அளவுக்குச் சமய முக்கியத்துவம் உடையதோ, அந்த அளவுக்கு மேக நோய்கள் அதில் மிகுதி. 1917இல் கும்பகோண நகரின் வாழ்க்கைப் புள்ளி விவரங்களை (Vital Statistics) ஆய்ந்து மதிப்பிடும் பணியைச் […]

மேலும்....

வழிபாட்டில் பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு

– கவிஞர் கலி.பூங்குன்றன்

கோயில்கள் _ வழிபாடுகள் உலகெங்கும் நடக்கக் கூடியவைதான். வீட்டில் பெரியவர்கள் செத்தால் அவர்களின் நினைவாகப் படையல் போடுவதுண்டு. போர்க்களத்தில் மாண்ட வீரர்களுக்கு நடுகல் நாட்டுவதுண்டு.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் வழிபாட்டு முறைகள் உண்டு. தன்னைச் சுற்றிச் சுழலும் இயற்கையின் சீற்றங்களுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் அளவுக்குப் புத்தி வளர்ச்சியில்லாத மனிதன் _ ஏதோ ஒரு சக்திதான் இதற்கெல்லாம் காரணம் என்று கற்பித்துக் கும்பிட ஆரம்பித்தான்.

மேலும்....

உலகெங்கும் பொங்கல் !

தமிழினத்தின் தனிப்பெருந் திருநாள் பொங்கல் திருவிழா! இயற்கையோடு ஒட்டி உறவாடி வாழ்ந்த இனங்களிலே மிகவும் சிறப்பான இனங்கள் தமிழினமும், அமெரிக்கப் பூர்விகக் குடிகளும் ஆவர். அமெரிக்கப் பூர்விகக் குடியினர் நன்றித் திருநாள் நம் பொங்கல் போன்றதே! இன்று கனடா நாட்டில் பொங்கல் அரசு மூலமாக சிறப்பிக்கப்பட்டு இந்த தை மாதமே தமிழர் மாதம் என்று கொண்டாடப் படுகின்றது. நன்றி! அங்கு வாழும் நம் ஈழ உடன் பிறப்புக்களுக்கு அய்க்கிய அமெரிக்காவிலும் பல மாநிலங்களில் பள்ளிகளில் பொங்கல் சிறப்பு […]

மேலும்....