பெரியாரின் கல்விச் சிந்தனைகள்

1. 85 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதி யுடையவனாக்குவது என்பதாகும். ‘குடிஅரசு’ 27.9.1931 இதன் பொருள் அறிவு வளர்ச்சி, கண்டுபிடிப்பு-களில் ஆர்வம் – மற்ற பழைமை-வாதக் கருத்துக்களைக் கண்டு அஞ்சி அஞ்சி வாழாமை – ‘சுதந்திரத்தோடு வாழ்தல்’ 2. ‘‘பொதுவாக மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவசியம் வேண்டி யிருப்பவை, கல்வி, செல்வம், தொழில், […]

மேலும்....

இருசக்கர வண்டியை திருடாதிருக்க புதிய பூட்டு!

இருசக்கர வாகனங்களுக்கு வலுவான பூட்டு போட்டாலும், அவற்றைத் திருடுகின்றவர்கள் திறந்துவிடுகிறார்கள். இதைத் தடுக்க தற்போது புதிதாக ஒரு பூட்டை “லாக் 8′ என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்கள். இந்தப் பூட்டு, திருட்டில் இருந்து இருசக்கர வாகனங்களைப் பாதுகாக்கிறது. இந்தப் பூட்டு, திருடர்கள் வாகனங்களைத் திருட முயலும்போது சத்தம் எழுப்புவதோடு, வாகன உரிமையாளரின் செல்லிடப் பேசிக்குத் தகவல் அனுப்பிவிடும். அதுமட்டுமல்ல, வாகனம் எங்கே இருக்கிறது என்பதை வாகன உரிமையாளரின் செல்போன் மூலம் தெரிவித்துவிடும். இந்தப் பூட்டின் எடை குறைவு. வண்டியின் […]

மேலும்....

தமிழ்ப்பெண் கனடாவில் நீதிபதி

தமிழகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை என்பவர், கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் – சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலத்தை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறிவர். வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992ஆ-ம் ஆண்டு சட்டக் கல்வியை வள்ளியம்மை முடித்தார். அதன்பின் அவர், 1995ஆ-ம் ஆண்டு முதல் வழக்கறிஞர் பணியைத் தொடங்கி பல்வேறு வழக்குகளில் திறம்பட வாதிட்டு வெற்றி […]

மேலும்....

விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர்… 10

பெரியகுளம் ச.வே.அழகிரி – கி.வீரமணி மதுரை மாவட்டம் பெரியகுளம் முன்பு கழக பிரச்சாரக் களத்தில் முண்ணனியில் இருந்த ஊர்களில் ஒன்று. (தற்போது சற்று சுணக்கத்தில் உள்ளது; விரைவில் அந்நிலை மாற்றப்படும் என்று நம்புகிறோம்.) அதில் எண்ணற்ற பெரியார் பெருந்தொண்டர்கள் அரிய கொள்கை பரப்பும் தொண்டறச் செம்மல்களாக பலர் இருந்தனர். நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிய தோழர் மருதமுத்து, முதியவர்கள் காமாட்சி மா.செல்லப்பெருமாள், மீனாட்சி போட்டோ ஸ்டுடியோ முத்தய்யா அவரது குடும்பத்தினர், நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று இயக்க வீரராக இருந்தவர், […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : ஊடகத் துறையினர் அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களிடம் ஒருவிதமாகவும் மற்றவர்களிடம் ஒருவிதமாகவும் அணுகுவது குறித்தும் விஜயகாந்த் அதற்கு வெறுப்பை வெளிப்படுத்தியது குறித்தும் பண்பட்ட ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் தங்கள் கருத்து என்ன?– ம.தியாகராசன், வேலூர் பதில் : வெறுப்பை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அதற்கேற்ற முறையில் அவரது தொண்டர்களும் சரி, இவரும் சரி (காறி உமிழ்வது போன்றவை) முறையற்ற செயலில் இறங்குவது சரியான தீர்வு அல்ல. எதையும் முறையோடு செய்தல் அவசியம். கேள்வி […]

மேலும்....