ஆசிரியர் பதில்கள்

ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் கேள்வி: சட்டமன்றத்தில் பெரும்பாலும் 110ஆவது விதியின்கீழ் அறிவிப்பை முதல்வர் செய்வதற்கு வரம்பு ஏதும் கிடையாதா? – தமிழினியன், சென்னை-15 பதில் : சட்டமன்றத்தில் எப்போதாவது மிகவும் அவசியம் ஏற்படும்போது பயன்படுத்த வேண்டிய விதி அது. அதன் வாசகங்களே அதற்குச் சான்று. என்ன செய்வது? விலக்குகளே விதியாவது என்ற பரிதாப நிலை இன்று. மேலும் எதிர்த்தோ, விமர்சித்தோ கருத்துக்-களைக் கூற அவ்விதியின்கீழ் வாய்ப்பும் இல்லாத விதி 110 ஆகும்! கேள்வி: நூறு […]

மேலும்....

வெளிநாடுகளில் படிக்க உதவித் தொகை!

இந்திய மாணவர்களுக்கு காமன்வெல்த் உதவித் தொகை பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பு அல்லது பிஎச்டி ஆய்வுப் படிப்பைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் காமல்வெல்த் கல்வி உதவித் தொகை பெறலாம். அடுத்த ஆண்டு செப்டம்பர், அக்டோபரில் பிரிட்டனில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்-துறை அமைச்சகம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதிகபட்சம் 26 பிஎச்டி ஆய்வுப் படிப்பு மாணவர்கள் உள்பட 65 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் […]

மேலும்....

அஜினோ மோட்டோ அள்ளி வழங்கும் நோய்கள்

‘மோனோ சோடியம் குளுட்டோமேட்’ என்ற வேதிப்பெயர் கொண்ட உப்பு, அஜினோ மோட்டோ ஆகும். இதன் விஷத்தன்மை குழந்தைகளுக்குப் பலவித ஆபத்துக்களை உண்டாக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது கலந்த உணவைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பு வெகுவாகக் குறையும். இதனால் உடல் வளர்ச்சி குறையும். மூளையில் ‘ஆர்க்குவேட் நுக்ளியஸ்’ என்னும் பகுதியை பாதிப்பதால் எடை தாறுமாறாக அதிகரிக்கும். மூளை மட்டுமன்றி இரைப்பை, குடல், கல்லீரல் போன்ற உறுப்புகளில் அழற்சியையும் இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இதனால் […]

மேலும்....

அயனாவரம் நடைப்பாதையில் பிறந்து, பிச்சையெடுத்தவர் அயல்நாட்டில் சாதனை

வாய்ப்பு கிடைத்தால் யாரும் சாதிப்பர் என்று தகுதி திறமை பேசு வோருக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளார் ஜெயவேல். பெரியாரின் கனவை நினைவாக்கிய உமாவிற்கும், ஜெயவேலுவிற்கும் நமது பாராட்டுக்கள் அய்னாவரம் தண்ணீர்தொட்டி அருகில், சாலையோரம் நடைபாதையில் வசிக்கும் குடும்பம் ஜெயவேலுயுடையது. சிறுவனாக இருக்கும்போது சாலையில் பிச்சையெடுத்து தாயிடம் கொடுப்பார். அந்த காசில் அந்தத் தாய் சாராயம் குடிக்கும். இவருக்கு மூன்று அக்கா, ஒரு தம்பி. இப்படிப்பட்டவர் அயல்நாடுகளில் உயர்கல்வி பயின்று சாதனைப் படைத்து வருகிறார். இதுபற்றி அவரே விவரிக்கிறார். […]

மேலும்....

திருவள்ளுவர் மீது திடீர் பாசம் கொண்ட தருண் விஜய் சிங்கப்பூரில்- ஒரு விமர்சனம்

க.பூபாலன். சிங்கப்பூர் தருண் விஜய் எம்.பி.யுடன் ஒரு கலந்துரையாடல் சிங்கப்பூரில் நடைபெற்றது. நானும் கலந்துகொண்டேன். பட்டு வேட்டியுடன் மிடுக்காக வந்தார் தருண் விஜய். தமிழில் மகிழ்ச்சி சந்தோசம், வணக்கம், நன்றி என்று கூறி ஆங்கிலத்தில் எழுதிவைத்து தமிழில் உரையைத் தொடங்கினார். நல்ல தமிழ் உச்சரிப்பு. தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றும் போது திருவள்ளுவரை பற்றியும், இராஜராஜசோழன், வீரநாச்சியார், லெட்சுமிபாய், ஆண்டாள், பாராதி என போற்றி பாராட்டி வந்திருந்த தமிழ் உண்ர்வாளர்களை மகிழ்ச்சிப் பரவசப்படுத்தினார். ஆரம்பத்தில் பேசும்போதே நான் B.J.P., […]

மேலும்....