சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

நூல்: இதய ஒலிஆசிரியர்: டாக்டர் பழனி ஜி.பெரியசாமிவெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை- 600 017.போன்: 24342810, 24310769விலை: ரூ.350.00, பக்கங்கள்: 420. முடிவெடுப்பதில் தலைவர்கள் பாணி ஒரு விஷயத்தில் எப்படி முடிவெடுப்பது, அதை எந்தக் கோணத்தில் எங்கே முடிவெடுப்பது என்பதற்கு நல்லதொரு உதாரணமாக விளங்கும் நிகழ்ச்சி ஒன்றை இங்கே பதிவு செய்வது பொருத்தம் என்று கருதுகிறேன். 1987இல் எம்.ஜி.ஆர் அவர்கள் இரண்டாவது முறையாக (உடல் பரிசோதனைக்காக) அமெரிக்காவுக்கு வந்திருந்த-போது கனடாவில் வான்கூவர் […]

மேலும்....

செய்யக் கூடாதவை

நல்ல கருத்துக்கள் எங்கு கிடைப்பினும் விடக்கூடாது அறிவு என்பது பல்முனைகளிலிருந்து, பலரிடமிருந்து, பலவகையில், பல நேரங்களில் வந்து சேர்வது. மேலும், முயன்று பெறுவது ஆகும்.    எனவே, எங்குக் கிடைத்தாலும், யாரிடம் கிடைத்தாலும், எதில் கிடைத்தாலும், அதைப் பெற வேண்டும். பொட்டலம் மடித்த தாளைக்-கூட அண்ணா படிக்கத் தவற மாட்டாராம். அதனால்தான் அவர் அறிஞரானார். கண்டதைக் கற்றால் பண்டிதர் ஆகலாம் என்ற பழமொழி கூட இதை வலியுறுத்தச் சொல்லப்-பட்டதே ஆகும். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நண்பர்கள், உறவினர்கள், பெரியவர்கள், […]

மேலும்....

தமிழர் கழகம் என்னாது திராவிடர் கழகம் என்றதேன்

தந்தை பெரியார் விளக்கம் திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங்கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக்காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்தவர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்-படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவ-மாடுகிறது. நோய்நாடி, அதுமுதல் […]

மேலும்....

கழிவுகளை காசாக்கி வழிகாட்டும் இளைஞர்!

இந்தியா முழுக்க ஒவ்வொரு ஆண்டும் 43 மில்லியன் டன் கழிவுகளை வீசி எறிகிறோம். இதன் மதிப்பு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய். இதை முறையாகப் பயன்படுத்தினால் நாடும் சுத்தமடையும் நமக்கும் காசு கிடைக்கும் என்கிறார் கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மேத்யூ. இவர் செய்யும் பணி தொழிற்சாலைகள், பள்ளிகள், வீடுகள்… என 3,200 இடங்களில் இந்த நிறுவனத்தின் பைகள் வைக்கப்பட்டுள்ளன. கழிவுப் பொருட்கள் அனைத்தையும் இந்தப் பைகளில் சேகரிப்பார்கள். பைகள் நிரம்பியதும், இணையதளம் அல்லது பேப்பர் மேன் […]

மேலும்....

விரல் நுனியளவு ரோபோ!

கைவிரல் நுனியளவு, அதாவது வெறும் 15 மி.மீட்டர் நீளமே கொண்ட வளைந்து செல்லக்கூடிய ரோபோவைக் கண்டுபிடித்து போலந்து வார்சா பல்கலைக்கழக ஆராய்ச்சி-யாளர்கள் சாதனை படைத்துள்ளனர். ரோபோ ஆய்வு வரலாற்றில் புதிய மைல் கல்லாக இது கருதப்படுகிறது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள் மனிதனைப் போன்ற உடல் பாகங்களைக் கொண்டதாகவும் அல்லது மிருகங்கள், பிராணிகள் போன்றவை-யாகவும் இருந்தன. இவை இணைப்புகளுடன் அதிக எடை கொண்டவையாக இருந்தன. இந்த வகையான ரோபோக்கள் மின்சாரம் அல்லது மின்கலன்-களால் (பாட்டரியால்) இயக்கப்பட்டு வந்தன. […]

மேலும்....