ஆசிரியர் பதில்கள்

கேள்வி : இது இந்துக்கள் நாடு, இங்கு இருக்கும் காடும் மலையும் இந்துக் கடவுளுக்குச் சொந்தம் என்று ஈஷா யோகா மய்யத்தில், பெயர் கூறத் தகுதியற்ற ஒரு பி.ஜே.பி செயலர் சொல்லியுள்ளது பற்றி… – சொர்ணம், ஊற்றங்கரை பதில் :    மூளைச்சாயமேற்றி மனித உரிமை-களைக் கொச்சைப்படுத்தும் ஈஷா மய்யம் என்ற ஊழல்மிக்க இடத்தில் இத்தகைய எச்சிலைப் பேச்சுகள்தானே வரும்? சாக்கடை-களிடம் சந்தன மணத்தை எதிர்பார்க்கலாமா? கேள்வி: ‘என்.எல்.சி இன்டியா’ என்று நுழைப்பதன் உள்நோக்கம் என்ன? – இல.சங்கத்தமிழன், […]

மேலும்....

சொத்தை வாங்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்பு  மூலபத்திரங்கள் பட்டா, சிட்டா அடங்கல், நிலவியல் வரைபடம் (F.M.B.) மற்றும் (A-Registor) ‘அ’ பதிவேடு வில்லங்க சான்றுகள் முதலி-யவைகளை வைத்து பார்த்தால் தெரிந்துவிடும். மேற்குறிப்பிட்ட ஆவணங்களை சொத்தை வாங்குபவர்கள் சொத்தின் உரிமையாளர்களிடம் கேட்கும்போது, சொத்தின் உரிமையாளர்கள் முன் பணம் கேட்டாலே போலியாக விசாரிப்பவர்கள் விலகிக் கொள்வார்கள். யாரும் பணம் கொடுத்து ஏமாற தயாராக இருக்க மாட்டார்கள். உண்மையாக சொத்தை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும்தான் முன் பணம் கொடுத்து ஆவணங்களை […]

மேலும்....

துப்புரவுத் தொழிலாளியின் நேர்மை!

சுமன் தோய்போடே என்ற இந்த 37 வயது துப்புரவு தொழிலாளர் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் பணி புரிகிறார். அக்டோபர் 28 அன்று ஒரு கழிப்பறையில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 4 வைர மோதிரங்களைக் கண்டெடுத்தார். அதை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதற்கிடையில் மோதிரத்தைத் தொலைத்த பெண்மணி ‘காணவில்லை’ என்று புகார் தெரிவித்ததை அடுத்து மோதிரங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. சுமனின் நேர்மையைப் பாராட்டி விமான நிலையமும் அந்த பயணியும் […]

மேலும்....

உணவு நல்லது வேண்டும்!

உச்சி முதல் உள்ளங்கால் வரை புற்றுநோய் செல்கள் – புரோகோலி நம் உடலில் தினசரி புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அதை, நம் நோய் எதிர்ப்பு சக்தி அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைகின்றன. இதற்கு, நம்முடைய தவறான வாழ்வியல் பழக்கங்களும் உணவுப் பழக்கமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புரோகோலியில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம், நுண்ணூட்டச் சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை புரோகோலிக்கு உண்டு. புரோகோலியில் […]

மேலும்....

வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்!

அதிகாலை ஆறு மணி. ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியிலுள்ள கே.ஓ.எம். அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் அறுபதுக்கும் அதிகமான மாணவிகள் உற்சாகத்துடன் ஹாக்கி  விளையாடிக் கொண்டிருந்தனர்.  பள்ளியில் மாணவர்கள் ஹாக்கி விளையாடுவதில் என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? கடந்த பதினான்கு ஆண்டுகளாக மாநிலப் போட்டி-களிலும் கடந்த பத்தாண்டுகளாக தேசியப் போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கிறார்கள். அண்மையில் நெல்லையில் நடந்த தேசிய சீனியர் விளையாட்டுப் பிரிவில் முதல் பரிசு வாங்கி பள்ளிக்குப் பெருமை […]

மேலும்....