வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விஞ்சை இதை விந்த்யா என்பதன் திரிபு என்பார் தமிழறியார். விஞ்சுதல் (மிஞ்சுதல்) என்ற சொல் தமிழில்தான் உண்டு. வித்யா என்பதோ விந்த்யா என்பதோ விஞ்சை என வராது, வரத் தேவையுமில்லை. விஞ்சுதல், விஞ்சை, விஞ்சு என்பவை முதனிலையாகக் கொண்ட தொழிற்பெயர்களே. பொருளும் ஒன்றுதான். சடை இதைப் பலர் ஜடை என்று கூறி இழுக்குவர். இதுமட்டுமன்று. அவர்கள் சகரத்தையெல்லாம் ‘ஜ’ என்றே வாய்ப்படுத்து மகிழ்ந்து கொள்வர். இது பிழை என்பதும், மானக்கேடான செயல் என்பதும் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

திராவிடநாட்டுக் கல்வி வரலாறு– திராவிடப்பித்தன் மீள் பதிப்பாசிரியர்  – இரா.பாவேந்தன் சோழப் பேரரசர்கள் தங்களின் பெருமை களைப் பேசும் கல்வெட்டுக்களையும், மெய்க்கீர்த்தி களையும் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் வெட்டி வைத்தனர். சோழப்பேரரசுகளின் அரசியல் சாதனைகளை ஆவணப்படுத்தும் கல்வெட்டுகளையும் புகழ்பாடும் மெய்க்கீர்த்தி களையும் வெட்டி வைத்தவர்களுக்குக் கூட முறையாகக் கல்வியறிவு வழங்கப்படவில்லை. “ஊர்ப் பொதுமக்களுக்குக் கல்வி பயிற்சியளிக்கப்பட்டதா, கல்வியளிக்கப்பட்டிருந்தால் அதன் தரமும், அது பயிற்றப்பட்ட முறையும் எத்தகையன என்ற கேள்விக்கு விடைகாண முடியவில்லை. ஊர்ப் பொதுமக்கள் பிழையற […]

மேலும்....

நஞ்சு முறிக்கும் அவுரி

நீலி எனப்படும் குறுஞ்செடி வகையைச் சேர்ந்த அவுரி, பல மருத்துவப் பலன்களைக் கொண்டது. சிறந்த நஞ்சு நீக்கி. முற்காலத்தில் விவசாய நிலங்களில் அவுரியைப் பயிரிட்டு மண்ணில் இருக்கும் நச்சுகளை அகற்றுவார்கள். அவுரி இலையும் வேரும் பல்வேறு வகையில் பயன்படுபவை. “உரிய லவுரித் துழைத்தான் ஒதுபதினெண்அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் – தெரிவரியவாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்சீதம் அகற்றும் தெரி என அவுரியைப் பற்றி சொல்கிறது அகத்தியர் குணவாகடம். ¨    பதினெட்டு வகையான நச்சுக்களை முறிக்கும் ஆற்றல் […]

மேலும்....

குழந்தை ஆணா? பெண்ணா? கடவுள் அளிப்பதா? இல்லை! இல்லை!

நாம் விரும்பிய குழந்தையை பெற முடியும்! குழந்தை ஆணா? பெண்ணா? இந்தியாவில் இது பெரும் சிக்கல். ஆண்தான் வேண்டும் என்ற ஒரு தவறான விருப்பு மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்டுவிட்டது. அதற்கு பெண்களின் பாதுகாப்பும், செலவும், பிறர் வீட்டுக்கு வாழச் செல்வதும் காரணமாகின்றன. ஆணாயினும் பெண்ணாயினும் நம் குழந்தை என்று ஏற்று மகிழ்வதே பெற்றோருக்கு அழகு. ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது அறியாமை மட்டுமல்ல. அநீதியும் ஆகும். பெண் என்று அறிந்ததும், கருவில் கலைத்தல், பிறந்த பின் கொல்லுதல் […]

மேலும்....

உளவியல் படிப்பு… வளமான எதிர்காலம்

மனச்சோர்வு தொடங்கி சிந்தனைக் குறைபாடுவரை மனம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட நாம் ஆலோசனை பெறுவது… உளவியலாளர்களிடம்! மாறி வரும் உலகில் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் (ஷிtக்ஷீமீss ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) என்று, உடல் நோய்களுக்கு இணையாக மனநோய்களும் முன் எப்போதும் இல்லாத வகையில் பெருகி வருவதால், மருத்துவ உலகில் உளவியலாளர் களுக்கான தேவை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து நிறுவனங்களிலும் ஓர் உளவியலாளர் இருப்பது அவசியமாகிவிடும். இந்தச் சூழலில், உளவியல் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் […]

மேலும்....