செய்யக் கூடாதவை

பெரும் சிக்கல்களைப் பிள்ளைகளிடம் மறைக்கக் கூடாது குடும்பத்தில் சிக்கல்கள் எழும்போது பெரியவர்கள் மட்டத்திலே பேசுவார்கள். பிள்ளைகள் அதைக் கேட்டுக் கொண்டிருந்-தாலும், நீங்கள் போய் உங்கள் வேலையைப் பாருங்க என்று அனுப்பிவிடுவார்கள். பிள்ளைகளிடம் பேசத் தகுதியற்ற, தேவையற்றவற்றை அவர்களிடம் பேசாமல் தவிர்ப்பது சரி. ஆனால் எதிர்காலத்தில் அவர்களையும் பாதிக்கும் சிக்கல் என்றால், பெரிய பிள்ளைகளுக்கும் அதைப் பற்றி அறியச் செய்வது அவர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது.    அப்போதுதான் நமக்கு என்ன எதிர்ப்புகள் உள்ளன. யார் யார் எதிரிகள்; நாம் எப்படி […]

மேலும்....

வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

அம்பரம் ஆடைக்கும், வானுக்கும், திசைக்கும், கடலுக்கும், மன்றத்திற்கும், துயிலிடத்திற்கும், உதட்டுக்கும் பெயராகிய அம்பரம் என்பது தூய தமிழ்க் காரணப் பெயர். அம்முவது என்றால் சூழ்ந்திருப்பது. அரம் உறுவது என்ற பொருள் பட்டு வருவதோர் கடைநிலை. இடையில் ‘ப்’ விரித்தல். இந்தக் கடைநிலை ‘ப’ கரத்தையும் இழுத்துக் கொண்டு (பரம்) கடைநிலையாய் வருவதும் உண்டு. விளம்பரம் என்பதிற்காண்க. எனவே, அம்பரம் சூழ்ந்திருப்பது. ஆடை உடலைச் சூழ்ந்திருப்பது காண்க. திசையும் அவ்வாறே, கடலும் அவ்வாறே. மன்றம் அமைந்திருப்பாரைச் சூழ்ந்திருப்பதைக் காண்க! […]

மேலும்....

தோல் ஒவ்வாமையைத் தடுக்க 10 வழிகள்

1    ஒவ்வாமை எதனால் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்து, அதை ஒதுக்க வேண்டும். 2.    குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாயம். 3.    தாய்ப்பால் போதவில்லை எனில், சோயா பால் தரலாம். 4.    ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு நான்கு மாதம் முடிந்ததுமே திட உணவுகளை அறிமுகப்படுத்திவிட வேண்டும். 5.    அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு-களையும், வாழைப்பழம், வேகவைத்த ஆப்பிள் போன்ற உணவுகளையும், படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும். 6.    கடலை கலந்த சத்துமாவு பல குழந்தை-களுக்கு ஒவ்வாமை […]

மேலும்....

நிற்காமல் 500 கி.மீ. ஓடமுடியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த 53 வயதான டீன் கார்னாஸெஸ் என்பவர் 80 மணிநேரம் தொடர்ந்து ஓடி 563 கி.மீ தூரத்தைக் கடந்திருக்கிறார். இந்த அதிசய மனிதரின் உடலில் உள்ள அரிய வகையான மரபியல் நிலைமையே இதற்குக் காரணம். சிறு வயதிலிருந்து இவர் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், இப்போதும் மாரத்தான் போட்டிகளில் ஓடுவதை நிறுத்தவில்லை. 50 நாட்களில் 50 மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அப்போதும், […]

மேலும்....

இரைப்பை சுரக்கும் அமிலம் இரும்பையே அரிக்கும்!

மனிதர்களாகிய நம் இரைப்பையில் சுரக்கும் அமிலம் எவ்வளவு தெரியுமா? 24 மணி நேரத்தில் 68 அவுன்ஸ். அதாவது 2 லிட்டர் இரைப்பை அமிலம் சுரக்கிறது. இந்த அமிலத்தின் இராசயனப் பெயர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் என்பதாகும். இந்த அமிலத்தில் நாம் முகம் மழிக்கப் பயன்படுத்தும் ஒரு பிளேடைப் போட்டு வைத்தால் 24 மணி நேரத்தில் அந்த பிளேடின் 40% பாகம் கரைந்துபோய் இருக்கும். தொழிற்சாலைகளில் இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உலோகங்களில் உள்ள துருவைப் போக்கப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும்....