மல்லையா மத்திய அரசின் செல்லையாவா?

சாராய சாம்ராஜ்ய சக்ரவர்த்தி விஜய் மல்லையா 9000 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல், தவணை கடந்த பாக்கி உள்ள நிலையில் நாட்டை விட்டே பறந்து சென்று இங்கிலாந்து நாட்டிலும் அவருக்குச் சொந்தமாக உள்ள 2 ஏக்கர் பங்களா வீட்டில் பவிசாக வாழ்கிறார். இவர்தான் திருப்பதி வெங்கடாசலபதிக்கு ரூபாய் 1 கோடிக்கு மேல் பெறுமானமுள்ள தங்கக் கிரீடம் காணிக்கை கொடுத்தார். ஆனால், ஏழை விவசாயி 3.80 லட்சம் உழவு ஊர்தி (டிராக்டர்) வாங்கிய கடனுக்கு இன்றுவரை […]

மேலும்....

ஒடுக்கபட்டோர் முன்னேற்றத்திலும் மதச்சார்பின்மையிலும் நான் உறுதியாக நிற்பவன்

சென்னை பெரியார் திடலில் 07.05.1979 அன்று திராவிடர் கழகம் தலைமை நிலையத்தால் ஒரு வார கால மாணவர் பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. சென்னை பகுத்தறிவாளர் கழக தலைவராக இருந்த பகீரதன் அவர்கள் தலைமையில் துவங்கிய இம்முகாமில் கழக பொதுச் செயலாளர் என்ற முறையில் கலந்துகொண்டேன். அப்போது பயிற்சி முகாம் மாணவர்களிடையே உரையாற்றும்போது, “இந்தப் பயிற்சிக்கு வந்துள்ள உங்களுக்கு முக்கியமாக வேண்டியது ராணுவக் கட்டுப்பாடு ஆகும். அதற்கு மேலும், நமது கழக கட்டுப்பாடு இங்கு இருக்கும். இந்தக் கட்டுப்பாடு […]

மேலும்....

முகத்திரையை கிழிக்கும் ஒரு முயற்சி

மனிதக் கழிவை மனிதரேஅள்ளும் கொடுமையான நடைமுறையைக் குறித்துக் கூறும் நூல்கள் பலவற்றை கண்டிருக்கிறேன்; வாசித்துமிருக்கிறேன். அந்நடைமுறை மனிதத்தன்மையற்ற செயல் என்பதால் அதன் குரூரங்கள் பற்றி எழுதும் வேட்கை பலருக்கு உள்ளது. அத்தகைய நூல்களில் பெரும்பாலானவற்றில், உலர் கழிப்பிடங்களை எவ்வாறு நவீனப்படுத்தலாம் என்பது பற்றி அதிக அக்கறை செலுத்தப்பட்டிருக்கும்.

மேலும்....

கோடைவெய்யில் கொடுமை எச்சரிக்கையும்; பாதுகாப்பும்

சிகரம்

கொட்டித்தீர்த்த மழைக்குப் பின் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறவே மழையில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டது. மரங்கள் பெருமளவு வெட்டப்பட்டதால் நிழல், குளிர் இல்லா நிலையில் வறட்சி, வெப்பம் இவற்றின் உச்சம்; கடுமை!

கோடைத் தொடக்கமே கொடுமையாக, கடுமையாக இருப்பதால், உச்சக்கட்ட கோடையின்போது தாங்கமுடியாத தகிப்பு கட்டாயம் இருக்கும். எனவே, இப்போதிருந்தே நாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பான சில செயல்பாடுகளில் இறங்க வேண்டியது கட்டாயம்.

மேலும்....

புரட்சிக்கவிஞர் எனும் திராவிடக் கவிஞர்

மஞ்சை வசந்தன்

29.04.1891இல் பிறந்து கனகசுப்புரத்தினமாய் வளர்ந்து, பாரதியார் தொடர்பிற்குப் பின் பாரதிதாசனாகி, பெரியார் கொள்கையால் கவரப்பட்ட பின் புரட்சிக்கவிகள் புனைந்து புரட்சிக்கவிஞராகி திராவிடர் வரலாற்றில் நிலைத்தவர்; திராவிட இயக்கத்தைப் பாடியதால் தமிழ் உள்ளவரை திராவிடர் இயக்கத்தையும் இலக்கியமாய் நிலைக்கச் செய்தவர்.

மேலும்....