சிறுகதை – தெரிந்த வழி

– அய்ரேனிபுரம் பால்ராசய்யா தாசில்தார் அலுவலகத்தில் தனது மகள் சரசுவதிக்கு ஜாதிச் சான்றிதழ் வாங்கப்போய் நின்று நின்று கால் வலித்தது முத்துலட்சுமிக்கு. மதியம் மூன்று மணி வரை பசியோடு காத்திருந்தும் சான்றிதழ் கிடைத்த பாடில்லை. பக்கத்திலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தபோது பியூன் வந்து அவளது பெயரைச் சொல்லி அழைத்தான். “நீ கிறிஸ்டியன் சாம்பவர்ன்னு சான்றிதழ் கேட்டிருந்தா உடனே கிடைச்சிருக்கும், நீ எஸ்.சி இந்து சாம்பவர்ன்னு கேக்கறதனால நாளைக்கு உங்க வீட்டுக்கு அதிகாரிங்க வந்து பரிசோதனை பண்ணின பிறகுதான் […]

மேலும்....

படம் சொல்லும் கதை

இப்படத்தை பார்த்தவுடனே இவர்கள் தந்தையும் மகளும் என்று நீங்கள் கருதலாம். ஆனால், உண்மை என்ன தெரியுமா? இவர்கள் கணவன் -மனைவிகள். ஏமான் நாட்டில் இன்னும் தொடரும் குழந்தைத் திருமணக் கொடுமையை இப்படம் சொல்லுகிறது. ஹஜ்ஜா ஹஜ்ஜா மலைப்பகுதியில் வசிக்கும் டஹானி என்ற 6 வயதுச் சிறுமி தனது 25 வயதுக் கணவர் மஜீத்-உடன் (இடப்புறம்) நிற்கிறார். அவருடன் நின்றுகொண்டிருக்கும் இன்னொரு ஜோடி டஹானியின் தோழி காதாவும் அவரது கணவரும். ராய்டர்ஸ் செய்தியில் வெளியான இப்படத்தை ஸ்டீபன் சின்க்லர் […]

மேலும்....

கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க…

– மகிழ்நன் வழிமுறை 1: கடவுளிடம் நாம் மனதுருகி அவரிடம் கீழ்கண்டவாறு கர்த்தரை நோக்கி வேண்டுவோமாயின் என்ன நடக்கும்? மதிப்பிற்குரிய/அன்பிற்குரிய எல்லாம்வல்ல உலக உருவாக்கதிற்கு காரணமான கடவுளே, இவ்வுலகிலுள்ள கொடிய நோய்களில் ஒன்றாகிய புற்று  நோயை இன்றே தீர்த்திடுமாறு, முழு நம்பிக்கையோடு வேண்டிகொள்கிறோம் தாங்களும் மத்தேயு 21:21, மாற்கு 11:24. யோவான் 14:12-14, மத்தேயு 18:19, ஜேம்ஸ் 5:15-16 இல் கூறியபடி எங்கள் நம்பிக்கைக்கு இறங்குவீர் என்று இயேசுவின் பெயராலே வேண்டுகிறோம். ஆமேன். இதுபோன்று நாம் உண்மையிலேயே […]

மேலும்....

செய்திக் கீற்று

– அன்பன் அட்சய திருதியை பலன் அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்று புரளி கிளப்பி 10 ஆண்டுகளாக நகை வியாபாரிகள் நல்லா கல்லா கட்டுகிறார்கள். மூடநம்பிக்கையால் பக்தைகளும் இதற்குப் பலியாகிறார்கள். அன்றைய தினம் திரளும் கூட்டத்தில் திருட்டுகள் பெருமளவு நடக்கின்றன. ஆனால், ஒன்றிரண்டே தெரியவருகின்றன. இந்த ஆண்டு ஏப்.24இல் அட்சய திருதியையன்று சென்னை, தியாகராயர் நகரில் கூட்டம் அலைமோதியது. வியாசர்பாடி மாலகொண்டையா என்பவரின் மனைவி ஓபுலம்மா நகை வாங்கக் கொண்டுவந்த 5.50 […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : திருமண சந்தையிலே தன்னை விற்றுக் கொள்ளும் மணமகனுக்கும், தேர்தல் திருவிழாவிலே தன்னை விற்றுக்கொள்ளும் வாக்காளனுக்கும் என்ன வேறுபாடு? f- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை பதில் : அந்த மணமகன் – வாழ்நாள் முழுவதும் அறிவை அடகு வைத்தவர். அந்த வாக்காளர் _5 ஆண்டுகளுக்கு தன் புத்தியை அடகுவைத்து, வாடகைக்கு விட்டவர் (விற்றவர்). கேள்வி : உலகில் பல்வேறு நாடுகள் காலத்திற்கேற்ப தங்களுடைய அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்றிக் கொள்ளும்போது, இந்தியா மட்டும் இன்னமும் இந்துத்துவா அடிப்படையிலேயே […]

மேலும்....