நிகழ்ந்தவை

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 11 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 59 சதவிகித வாக்குகளும், பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தலில் 57 சதவிகித வாக்குகளும், பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்தலில் 57 சதவிகித வாக்குகளும், பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 5ஆம் கட்டத் தேர்தலில் 59 சதவிகித வாக்குகளும் பதிவாகின. 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்ஜுதர் விரைவு ரயிலில் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்ததாக குற்றம் […]

மேலும்....

முற்றம்

ஒலிவட்டு

ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் ராப் என்ற சொல்லிசை வடிவத்தைக் கேட்டிருப்போம். ஆனாலும், அதிலும் வணிக நோக்கம்தான் இருக்கும். அவற்றிலிருந்து மாறுபட்டு சமூக அக்கறையுடன், தன்னை வளர்த்து ஆளாக்கிய இந்தச் சமூக மேம்பாட்டுக்கு இந்தச் சொல்லிசை வடிவத்தைப் பயன்படுத்தி வருகிறேன் என்கிறார் லண்டன் வாழ் ஈழத்தமிழர் சுஜித்ஜீ. இந்தச் சொல்லிசைக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது.

மேலும்....

மாணவர் மனநலம் : பொறுப்பு யாருக்கு?

– மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் மா.திருநாவுக்கரசு

(சென்னையில் கடந்த 9.2.2012 அன்று ஒரு உயர்நிலைப் பள்ளியில் உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையின் உயிரை 9ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கத்தியால் குத்திப் போக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நல்ல மனம் படைத்த அனைவரையும் உறையச் செய்துவிட்டது. இதுபோன்ற துயரச் சம்பவம் ஏன் நடைபெற்றது? இதற்கான காரணம் என்ன? இனி அவ்வாறு நடக்காமல் இருக்க மாணவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து குழந்தைகள் மனநலம் என்ற சிறந்த தொடரை உண்மை இதழில் எழுதி,

மேலும்....

தொ(ல்)லைக்காட்சியால் பாழாகும் மாணவர்களின் ஆற்றல்கள்

கோவையைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை செய்யும் அஜய்குமாரின் சொந்த அனுபவத்தைப் பார்த்தால், அவரது இரு குழந்தைகளின் இயல்பான ஆற்றல்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எவ்வாறு அழித்துவந்தன என்பதை உணர முடிகிறது.

அவருக்கு ஒன்பது வயது மகள், மூன்று வயது மகள் என்று இரு குழந்தைகள். அவர்கள் எப்போது பார்த்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே அதிகமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மற்ற குழந்தைகளோடு விளையாட வேண்டும் என்ற இயல்பான ஆவலும் அவர்களிடம் இல்லை.

மேலும்....

ராஜபக்சேவுக்கு எதிராக ஜெனிவாவில் அய்.நா.வின் போர்க்குற்றத் தீர்மானம் : நியாயத்தின் பக்கம் இந்தியா நிற்க வேண்டும்

அய்.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் பிப்ரவரி 27 ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெறவிருக்கிறது.

போர்க்குற்றவாளியாக இலங்கை ராஜபக்சேவை அரசு அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற விருக்கும் நிலையில், (மத்திய) நமது இந்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்? இருக்கப் போகிறது என்பது பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்களின் ஊகங்களாக ஒருபுறம் இருக்கிறது.

மேலும்....