இந்துமத வேதநூல்களில் அறிவியல் இருகிறதாமே?

(பொள்ளாச்சியாரின் கட்டுரைக்கு மறுப்பு) – பேராசிரியர் ந.வெற்றியழகன் இந்துமதம் அறிவியலின் இருக்கையாமே? இந்து வேத இதிகாச புராணங்களில் அறிவியல் கருத்துகள் அப்படியே கொட்டிக் கிடக்கின்றன என்று, கதைவிட்டுக்கொண்டு அவற்றின் மகாத்மியம் பற்றி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏடுகளில் இறுமாப்புடன் எழுதியும், மேடைகளில் மிடுக்காக உரையாற்றியும் திரிகின்றனர் அறிவியல் படித்ததாகக் கருதிக்கொள்ளும் இந்துமதப் பார்ப்பனத் தலைவர்களும் அவர்களின் பாதம் தாங்கிகளாக உள்ள தொண்டரடிப் பொடியாழ்வார்கள் ஆக விளங்கும் தமிழறிஞர்களும். அவர்களுள் ஒருவராக உள்ளவர்தாம் அருட்செல்வர் என அழைக்கப்பெறும் ஒருவர். […]

மேலும்....

புதுப்பாக்கள்

அய்யகோ! பசியோடுகந்தல் உடைஅணிந்து வந்தபிச்சைக்காரனைவிரட்டுகிறான்…சூடான இட்லியும் வடையும்காகத்திற்குஎடுத்து வைத்துதனது முதல் வியாபாரத்தைத்தொடர்ந்த கடைக்காரன் * * * * * * * * தூக்கில் தொங்கியும் சாகவில்லைதண்ணீர்க் குடம்… * * * * * * * * யாராக இருக்கும்…?பக்தனின் நெஞ்சம்பதை பதைத்ததுவீட்டு வாசலில்அறுத்து வைக்கப்பட்டஎலுமிச்சை…!! * * * * * * * * கருவறைக்குள் நுழையாதே!பார்ப்பன நரிகளின்ஊமைக் காமக் களியாட்ட தேவநாதன் கைதான பிறகுகாரணம் தெரிந்தது… * * […]

மேலும்....

வஞ்சகம் வாழ்கிறது – 5

(புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இரணியன் (அல்லது) இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம்) ‍ – எழுதியவர் : ந.சேதுராமன், திண்டிவனம் காட்சி 9 – கூடாரம்உறுப்பினர்கள்: பிரகலாதன், காங்கேயன் சூழ்நிலை: காங்கேயன் ஓலையில் ஏதோ எழுதுகிறான். பிரகலாதன் வருகிறான். பிரக: காங்கேயா? காங்: (எழுதுவதை வைத்துவிட்டு எழுந்து) என்ன பிரகலாதா! இரவு எங்கே தங்கினாய்! வீரர்கள் எல்லோரும் பயந்துட்டாங்க. நான்தான் அவாளுக்கு ஆறுதல் சொன்னேன். பிரக: எங்கே அந்த வீரர்கள்? காங்: அதோ […]

மேலும்....

இது மாணவர்களுக்காக!

– க.அருள்மொழி அனைவருக்கும் கல்வி அதிலும் சமச்சீர் கல்வி என்ற நிலையில் மாணவர்கள்  கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். மாணவர்களின் கவனத்தைச் திசைத்திருப்பப் பல்வேறு சூழல்கள் அவர்களைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.  இவற்றையெல்லாம் தவிர்த்து ‘என் கடன் (பள்ளிப்) பணி செய்து கிடப்பதே’ என்று அவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால்தான் அவர்கள் தங்களை ஒரு முக்கிய இடத்தில் நிறுத்திக் கொள்ள முடியும். இப்போதெல்லாம் ‘நன்று”(Good) என்ற நிலையில் தேர்ச்சி பெறுவதெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது. […]

மேலும்....

கவிதை – வெட்டியான்

– வீர தமிழன் எரிப்பதாபுதைப்பதாவெட்டியானின்குல வழக்கம்? எரியூட்ட விறகையும்,புதைக்க மண்ணையும்மட்டுமேவெட்டிப்போட்டுப்பழகியதால்வெட்டியானாகிப்போனவன்! லாபம் ஏதும்இல்லாத வேலைஎன்பதால்தான்இவன் செய்யும் வேலைவெட்டிவேலைஎன்றானதோ! துண்டிலே விழும்சில்லரைகளில்தொடங்குவதால்அவன் வரவு செலவுத் திட்டம்முழுவதும்துண்டுகளாலேயேநிரப்பப்படுகிறது! அவன் மீதுஇரக்கம் வந்துவிடக்கூடாதுஎன்பதற்காகவும்தான்கண்கள் மூடப்படுகிறதோபிணங்களுக்கு! திரும்பிப்பார்க்காமல்செல்லுங்கள்அரைஞாண்கயிறின்வெள்ளி வரைஅறுத்துப்பெற்ற பிறகுதிரும்பிப்பார்க்கஎன்ன இருக்கிறது? ஜாதிக்கொருசுடுகாடு வைத்தவன்ஏன்எல்லா சுடுகாட்டுக்கும்ஒரே ஜாதியில்வெட்டியானை மட்டும்வைத்தான்? இந்தத் தீண்டத்தகாதவனின்தீண்டலில்தான்மோட்சம் பெறுகின்றனபிணங்கள்! சந்து பொந்தெல்லாம்மின்விளக்குகள் கட்டிமனைவியைத்துணைக்கழைத்துக்கொண்டுசிறுநீர் கழிக்கச் சென்றவனிடம்இரவெல்லாம்பிணத்தோடு பிணமாகபயமின்றிப் படுத்துறங்கியவன்எப்படி அடிமையானான்? கருப்பன் வந்திருக்கின்றான்என இருந்த இடத்திலிருந்தேகத்தித் தெரிவிக்கின்றனசெத்துப்போனவனின்பேரக்குழந்தைகள்!இந்த வருசம்எதுவும் கிடையாதுஎனத் தெரிந்தும்வந்து நிற்கிறான் பாருமுறுக்கிக்கொள்கிறாள்கிழவி! தீபாவளிக்கும்பொங்கலுக்கும்தப்பை தட்டிபிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறான்வெட்டியான்தான் செய்தவேலைகளுக்கானகூலியை!

மேலும்....