பெரியார் இல்லாமல் முன்னேற்றம் இல்லை

தலித் சிந்தனையாளர்கள் சிலர் பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதியை ஒழித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதி ஒழிப்பு என்பது சாத்தியமா? நான் திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்தவன். திராவிடச் சிந்தனைகள் எனக்குள் ஊறிப்போன விஷயம். பெரியாரின் பங்களிப்பை நாம் சரியாக மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவை தான் காரணம். […]

மேலும்....

நுழைவுத் தேர்வு கூடாது!

கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனியம் செய்து வருகிறது.  அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேருவதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாம்!  எதற்காக?  பாஸ் செய்த சர்ட்டிபிகேட்டில் காலேஜில் சேர – சேர்த்துக்கொள்ளத் தகுதி உடையவன் (ணிறீவீரீவீதீறீமீ யீஷீக்ஷீ சிஷீறீறீமீரீமீ சிஷீக்ஷீமீ) என்று எழுதி, கையெழுத்துச் செய்து கொடுத்துவிட்டு, காரியத்தில் மார்க்குப் பார்த்து, திறமை பார்த்து, புகுமுகப் பரீட்சை வைத்துச் சேர்க்க வேண்டும் என்று உத்திரவு போடுவதும் தராதரம் பார்க்காமல் சேர்க்கக்கூடாது […]

மேலும்....

எண்ணம்

இந்தியர்கள் மத்தியில் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் நியாயமான விவாதங்கள் நடப்பதில்லை. பெரும்பாலான பொதுவிவாதங் களில் பரபரப்பு செய்திக்காக எதைஎதையோ பேசுகிறார்கள். குறிப்பாக எதிர்வாதம் செய்பவர்கள் மற்றும் வழக்கமான நடைமுறைக்கு எதிராகப் பேசுபவர்களை மக்கள் சகித்துக் கொள்வதில்லை. மக்களின் குறுகிய மனப்பான்மை காரணமாக இளைஞர்களிடையே புதுமையான யோசனை படைப்புத்திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பேச்சு சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு அறிவியல் உணர்வுகளை இளைஞர்களிடையே தூண்டிவிட வேண்டும். இந்தியா இன்றைக்கு சந்திக்கும் பிரச்சினைகளுக்கு […]

மேலும்....

நிகழ்ந்தவை

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் ஜூன் 11இல் பொறுப்பேற்றார். சட்டமன்ற புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 12இல் நடந்தது. 73% வாக்குகள் பதிவாயின. அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றி பெற்றார். அரிசிவிலையைத் தொடர்ந்து பருப்பு விலையும் ஜூன் 12ல் உயர்ந்தது. தலைமறைவாக இருந்த நித்யானந்தா ஜூன் 13ல் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்றார். மீண்டும் ஜூன்  14ல் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிடதி ஆசிரமத்தை கர்நாடக காவல்துறை சோதனையிட்டது. குடியரசுத் […]

மேலும்....