கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க….

– மகிழ்நன் மறக்கப்பட்ட கடவுளர்களும்… இறக்கப்போகும் கடவுளர்களும் பார்ப்பனிய இந்துமதத்தை சனாதன தர்மம் என்பார்கள், அதாவது என்றும் மாறாத் தன்மையுடையது என்பார்கள். இதையேதான் இன்று வழக்கில் இருக்கும் மதங்களின் நம்பிக்கையாளர்களும் நம்பிக் கொண்டிருக் கிறார்கள். அறிவியல் யுகம் மாற, மாற தம் நம்பிக்கையும் தாமும் மாறிக் கொண்டிருப்பதை ஒப்புக் கொள்ளாமல் மதங்களின் நிலைத்த தன்மைக்கு வக்காலத்து வாங்குவார்கள். இன்றைய மதங்கள் அனைத்தும் பண்டைய மத நிறுவனங்கள் காலாவதியான பின்பு தோன்றியவைதான். மறக்கப்படும் கடவுளர்களின்  எண்ணிக்கை காலப்போக்கில் மாறிக் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

திராவிட இயக்கத்தின் மீதும், ஒடுக்கப்பட்டோர் எழுச்சியின் மீதும் அவதூறுகள் பொழியும் பணியில் பார்ப்பனீயம், நேரடியாக மோதாமல் கதை மாந்தன் ராமனைப்போல மறைந்து நின்று தாக்குதல் தொடுக்கிறது. அந்த வரிசையில் இலக்கியவாதி என்ற போர்வையில் ஜெயமோகன் என்பவர் அவிழ்க்கும் புளுகு மூட்டைகளை அம்பலப்படுத்தும் நூல் `இன்றைய காந்தி யார்?. திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு ஆதாரங்களை அள்ளிவீசி ஆணித்தரமாகக் கேள்வி எழுப்புகிறார். இந்நூலிலிருந்து…. காந்தியின் கற்பனை வாதங்களுக்கும் கிறுக்குத்தனங்களுக்கும் திராவிடக் கட்சியினர் எழுதியபோது இங்கே கொதித்தனர் சிலர். காந்தியை […]

மேலும்....

நாங்கள் நாத்திகர்கள்

-சு.அறிவுக்கரசு உலகம் ஒருவனாலும் படைக்கப்பட்டது அல்ல என்று கூறுபவர்கள். மனிதன் படைக்கப்பட்டவன் அல்ல; பரிணாம வளர்ச்சியால் உருவானவன் என்பவர்கள். கடவுளும் இல்லை, நரகமோ சொர்க்கமோ கிடையாது என்பவர்கள். இறப்புக்குப்பின் ஒரு வாழ்க்கையும் கிடையாது. நரகத் துன்பமோ சொர்க்க இன்பமோ இல்லை என்பவர்கள். பாபம் செய்தால் நோய் வரும் என நம்பாதவர்கள் மருத்துவம் செய்தால் நோய் தீரும் என்பவர்கள். பிரார்த்தனையால் எதுவும் நடக்காது என்பவர்கள். சாமியார்கள், மடத் தலைவர்கள் என்போர் மோசடிப் பேர்வழிகள். எத்தர்கள். பிறரை நம்பச் செய்து […]

மேலும்....

முப்பத்து முக்கோடி தேவர்களா?

– உடுமலை வடிவேல் ஆன்மீகவாதிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் வழிபடும் கடவுள்கள் பற்றி எள்ளளவும் சிந்திப்பதில்லை. அவர்கள், அதற்காக பயன்படுத்தும் சொல்லாடல்களைப் பற்றியும் சிந்திப்பதில்லை. செக்கு மாடு போல சுற்றி சுற்றி வருவதைத் தவிர, வேறெதுவும் தெரியாது. மன்னிக்கவும் ஒன்றே ஒன்று தெரியும். பகுத்தறிவுக்காரர்கள் ஆன்மீகவாதிகளின் நம்பிக்கைகளை சமுதாய மேம்பாட்டின் பொருட்டு, ஆராய்ந்து உண்மைகளைச் சொல்லும்போது, ஆஹா… எங்களது மத நம்பிக்கை உணர்வை புண்படுத்துகிறாயே! என்று பொருளில்லாமல் புலம்பத் தெரியும். அவ்வளவுதான். இப்போது வழக்கத்திலிருக்கிற எல்லாவற்றையுமே ஆய்ந்தாய்ந்து சொல்லப்பட்டு […]

மேலும்....

விடியலே வா

– வீ. மீனாட்சி ஒரு நகரத்தைத் தாண்டி 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு கிராமம். அது ஒரு மாலை நேரம். வாசலோரத்தில் நீரை இரைத்து முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தாள் தனம். தூரத்தில் அவளுடைய அண்ணன் வேலப்பனும், அவன் மனைவியும், அவர்களின் 6 வயது மகன் ராசுவும் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். தனத்தின் முகத்தில் மகிழ்ச்சியின் ஒளி வீசியது. முகத்தை சேலையால் துடைத்துக் கொண்டே அவர்களை எதிர்கெண்டு, வாங்க, வாங்க என்று வரவேற்றாள். வீட்டின் முற்றத்தில் சுருட்டி […]

மேலும்....